Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விநாயகர் சிலை ஊர்வலம்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போகாதீங்க!

Chennai Traffic Diversion : விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, சென்னையில் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி போக்குவரத்து மாற்றம். திருவல்லிக்கேணி, மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப தங்களது பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலம்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போகாதீங்க!
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
Umabarkavi K
Umabarkavi K | Published: 31 Aug 2025 06:15 AM

சென்னை, ஆகஸ்ட் 31 : விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் (Chennai Traffic Changes) செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் கடற்கரைப் பகுதிகளில் உள்ள தீர்மானிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு வரப்பட உள்ளதால், குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டப்பட்டது. இதையொட்டி, இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதீஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு பின்பு, நீர்நிலைகள், ஆறுகளில் கரைக்க பக்தர்கள் தயாராகி வருகிறது. அந்த வகையில், சென்னையில் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று விநாயகர் சிலை கடற்கரைகளில் கரைக்கப்படுகிறது.

அதாவது, ஸ்ரீனிவாசபுரம் மயிலாப்பூர், பல்கலை நகர் திருவான்மியூர், என்4 மீன்பிடி துறைமுகம் புது வண்ணாரப்பேட்டை, பாப்புலர் எடை மேடை திருவெற்றியூரில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுடன் பாதசாரிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால், சென்னை போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பகுதிகளை சுற்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் இல்லை.. தமிழக அரசு அறிவிப்பு

அதன்படி, திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை, ஆர்.கே. சாலை சந்திப்பிலிருந்து (வலது புறம் திரும்பி), வி.எம். தெரு, லஸ் ஜங்சன், அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர். ரங்கா சாலை (வலது புறம் திரும்பி), பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி. ராமசாமி சாலை (இடது புறம் திரும்பி), செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, ஸ்ரீனிவாசா அவென்யூ (இடது திருப்பம்), ஆர்.கே. மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

அடையாறிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே. மடம் சாலை, திருவேங்கடம் தெரு (இடது புறம் திரும்பி), வி.கே. ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை (வலது புறம் திரும்பி), ஆர்.கே. மடம் சாலை (இடது புறம் திரும்பி), தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை (இடது புறம் திரும்பி), கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ். சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே. சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

சிலை ஊர்வலம் ரத்னா கஃபே சந்திப்பைக் கடக்கும் போதெல்லாம், ஜாம் பஜார் காவல் நிலையத்திலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

Also Read : கடைசி நேரத்தில் நின்ற திருமணம்.. மணமகள் சொன்ன பகீர் காரணம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும் போதெல்லாம், ஐஸ் ஹவுஸ் சந்திப்பிலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் பெசன்ட் ரோடு காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்படும் அல்லது இடதுபுறம் GRH சந்திப்பை நோக்கி சென்று தங்களின் இலக்கை அடையலாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.