Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய ரூட் இதுதான்!

Chennai Traffic Diversion : சென்னையில் பெசன்ட் நகர் பகுதியில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் அதற்கேற்ப தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளவும்.

வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய ரூட் இதுதான்!
போக்குவரத்து மாற்றம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Aug 2025 06:31 AM

சென்னை, ஆகஸ்ட் 30 : சென்னை பெசன்ட் நகர் பகுதியில் நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் (Chennai Traffic Diversion) செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரித்து நெரிசல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக பீக் ஹவரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றனர். இதோடு, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள், சாலை விரிவாக்கம், மேம்பால பணிகள் என நடந்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட அதிமாக இருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், சாலை பணிகளால் அவ்வப்போது போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் பெசன்ட் நகர் பகுதியில் நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  2025 ஆகஸ்ட் 29ஆம் தேதியான நேற்று பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 2025 செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால், பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், முக்கிய நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : திருச்செந்தூரில் முறைகேடான டிக்கெட் விற்பனை.. நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம்


அதன்படி, திரு.வி.கா பாலம் மற்றும் எஸ்.வி.படேல் சாலையிலிருந்து பெசன்ட் அவென்யூ சென்று பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் (எம்.எல். பார்க்) தடை விதிக்கப்பட்டு, எல்.பி. சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடைய அனுமதிக்கப்படும்.

7வது அவென்யூ மற்றும் எம்ஜி சாலை சந்திப்பிலிருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. எம்எல் பூங்காவிலிருந்து பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் மாநகர பேருந்துகள் எல்பி சாலை, சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை, எம்ஜி சாலை மற்றும் பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடைய திருப்பி விடப்படும்.

Also Read : ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்.. அஸ்தியை கரைப்பது போல் கிடக்கிறது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கிச் செல்லும்  மாநகர பேருந்துகள் பெசன்ட் நகர் 1வது அவென்யூ, சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, சாஸ்திரி நகர் 1வது மெயின் ரோடு, பின்னர் எம்ஜி சாலை வழியாக திருப்பி விடப்பட்டு எல்பி சாலையை அடைந்து தங்கள் இலக்கை நோக்கிச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.