வேற லெவலில் மாறப்போகும் கூமாபட்டி.. ரூ.10 கோடி கொடுத்த தமிழக அரசு… என்னவெல்லாம் வரும்?
Koomapatti Village : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி கிராமத்தை மேம்படுத்த தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீ அரசாசாணை வெளியிட்டுள்ளது. கூமாபட்டி கிராமத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரீல்ஸ் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், ஆகஸ்ட் 29 : விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியை சுற்றுலா தலமாக மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூமாபட்டி கண்மாய் அருகே மீன் கண்காட்சியம், குழந்தைகள் விளையாட்டு பகுதி அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூமாப்பட்டி கிராமத்தை (Koomapatti Village) சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி கிராமம் அமைந்துள்ளது. பிளவக்கல், கோவிலாறு அணைகளுக்கு அருகே இயற்கை சூழப்பட்ட பரபரப்பளவில் கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. சமீபத்தில், கூமாபட்டியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூமாபட்டி கிராமத்தை பற்றி பதிவிட்டு இருந்தார்.




இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. அதாவது, காதல் தோல்வியா, குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடணுமா?, இயற்கையுடன் இணைந்து வாழணுமா?, பூமியிலே சொர்க்கத்தைப் பார்க்கணுமா? ஊட்டி, கோடைக்கானால் போக வேண்டாம்.. கூமாபட்டி வாங்க என்றெல்லாம் பல வித கேள்விகளுடன் இளைஞர் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சோஷியல் மீடியால் டிரெண்டான நிலையில், பலரும் கூமாபட்டியின் இயற்கை அழகை ரசிக்க படையெடுத்தனர்.
Also Read : உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு முதலிடம் – மத்திய அரசு அறிவிப்பு
இளைஞர் வீடியோ
இருக்கே இருக்கு கூமாபட்டி
வாழ்க்கைல டப்ரெஷன் அ கூமாபட்டி க்கு போயிட்டு வாங்க மக்களே 🥳🤔
Credits- IG @dark_night_tn84#GoodNight#TamilBeats4U #Koomapatti pic.twitter.com/sWe501x2iy
— TamilBeats4U🎶 (@TamilBeats4U) June 25, 2025
ரூ.10 கோடி ஒதுக்கிய அரசு
அதோடு, கூமாபட்டி கிராமத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் இதற்காக நிதி ஒதுக்கீயும் பணிகள் எதுவும் நடக்கவில்லை என குற்றச்சாட்டி இருந்தார். இதனை அடுத்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வத்திராயிருப்பு வட்டம் பிளவக்கல் பெரியார் அணையில் ரூ.10 கோடி மதிபிபல் பூங்கா அமைக்கும் பணி நடைபெறும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
தமிழக அரசின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு நிதி ஒதுக்கீடு அரசாணை பெற்றவுடன் பணி தொடங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழக அரசு கூமாபட்டியை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீ அரசாணை வெளியிட்டுள்ளது.
Also Read : விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் பறிக்க சென்ற சிறுவன்.. துடிதுடித்து பலியான சோகம்.. பெற்றோரே உஷார்!
கூமாபட்டி கண்மாய் அருகே மீன் கண்காட்சியகம், குழந்தைகள் விளையாட்டு பகுதி அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கூமாபட்டியில் மரப்பூங்கா, யோகா செய்யும் இடம், உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. அதோடு, நதியை பார்த்துக் கொண்டே நடைபயணம் மேற்கொள்வதற்கான சாலையும் கூமாபட்டியில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.