ஒரு வாரத்தில் திருமணம்.. பத்திரிகை கொடுக்க சென்ற மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சியில் உறவினர்கள்!
Kallakurichi Accident : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோர் உயிரிழந்துள்ளனர். திருமணம் ஒரு வாரத்திற்கு நடைபெற இருக்கும் நிலையில், பத்திரிகை கொடுப்பதற்காக மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதி மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி, ஆகஸ்ட் 27 : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை விபத்தில் தந்தை, தாய், மகன் என மூன்று பேரும் உயிரிழந்தது (Kallakurichi Accident) பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞருக்கு ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதனால் பத்திரிகை கொடுப்பதற்காக தாய், தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சாலை விபத்துகளை தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும், சாலை விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சாலை விபத்துகள் தொடர்ந்து நடக்கிறது. சாலை விபத்துக்களால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கனோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான், கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, சாலை விபத்தில் தந்தை, மகன், தாய் என மூன்று பேரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடமுண்டி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது தந்தை ஆறுமுகம். இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது தாய் செல்லியம்மாள். நாராயணனுக்கு வரும் 2025 செப்டம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர். அதே நேரத்தில், பத்திரிகை கொடுக்கவும் நாராயணன் மற்றும் அவரது பெற்றோர் செய்து வந்தனர்.
Also Read : முதலிரவை வீடியோ எடுத்து இளம்பெண் மிரட்டல்.. காரைக்குடியில் சிக்கிய கும்பல்!




பத்திரிகை கொடுக்க சென்ற மாப்பிள்ளை பலி
அதன்படியே, 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதியான நேற்று மாலை பத்திரிகை கொடுப்பதற்காக நாராயணன், அவரது தந்தை ஆறுமுகம், தாய் செல்லியம்மாள் இருவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு திருக்கோவிலூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இதில், மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் உயிரிழந்தனர்.
Also Read : திருமணத்திற்கு நோ சொன்ன பெண்.. சுட்டுக் கொன்ற இளைஞர்.. ஹோட்டல் அறையில் சம்பவம்!
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தவெக நிர்வாகி என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அவரை தேடும் பணிகள் தீவிரமாக போலீசார் மேற்கொண்டுள்ளனர். ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.