Crime: முதலிரவை வீடியோ எடுத்து இளம்பெண் மிரட்டல்.. காரைக்குடியில் சிக்கிய கும்பல்!
Sivaganga Crime News: சிவகங்கை மாவட்டத்தில், இளம்பெண் கணவருடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக எடுத்து நான்கு பேர் கொண்ட கும்பல் மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நால்வரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

சிவகங்கை, ஆகஸ்ட் 27: சிவகங்கை மாவட்டத்தில் முதலிரவு வீடியோவை காட்டி இளம் பெண்ணை மிரட்டிய நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி நாம் காணலாம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமண நாள் அன்று முதல் இரவில் தம்பதியினர் இருவரும் அறையில் இருந்த நிலையில் அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதை திறந்திருந்த ஜன்னல் வழியாக அப்பெண் வசித்து வந்த வீட்டின் எதிர் வீட்டில் இருந்த கோகுல் சந்தோஷ் என்ற இளைஞர் பார்த்துள்ளார். உடனடியாக தனது வீட்டு மாடியில் இருந்து செல்போன் மூலம் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை தனது நண்பரான சித்த மருத்துவர் ஹரிஹரன் சுதன் என்பவரிடம் காட்டியுள்ளார்.
பிளான் போட்ட சித்த மருத்துவர்
இருவரும் அதனைக் கண்டு ரசித்த நிலையில் ஹரிஹரசுதனுக்கு யோசனை ஒன்று தோன்றியுள்ளது அதன்படி கோகுல் சந்தோஷிடம் நாம் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி அந்த பெண்ணிடம் பணம் பறிக்கலாம் என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நமது தேவைக்கு அந்த பெண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு கோகுல் சந்தோஷூம் ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: சிவகங்கை: தம்பதி ஒரே சேலையில் விபரீத முடிவு.. அனாதையான 3 குழந்தைகள்..!
மேலும் இரு நபர்களை தங்கள் கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டு அந்த இளம் பெண்ணை மிரட்டியுள்ளனர். முதலில் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு போலீஸிலிருந்து பேசுவதாக கூறியுள்ளனர். மேலும் உங்களுடைய ஆபாச படம் வெளியாகியுள்ளது என்றும், அதுகுறித்து போலீசருக்கு புகார் வந்துள்ளதால் விசாரிக்க தாங்கள் குறிப்பிடும் இடத்திற்கு வரவேண்டும் எனவும் கூறி மிரட்டியுள்ளனர்.
பணம், நகை கேட்டு மிரட்டல்
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் உடனடியாக அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு காரில் அழைத்துச் சென்று கணவன், மனைவி இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டிருந்த வீடியோவை காட்டி மிரட்டினர். இதனைக் கண்டு அந்த இளம் பெண் கதறி அழுதுள்ளார். மேலும் வீடியோவை அழிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த கும்பல் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிடாமல் இருக்க எங்களுக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: சிவகங்கை: மரத்தின் மீது எப்படி ஏறினாள்? – மர்மம் சூழ்ந்த பள்ளி மாணவி மரணம்
அது மட்டும் அல்லாமல் தங்களுடன் உடன்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர் தன்னிடம் தற்போது பணம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். ஆனால் விடாமல் அந்த பெண்ணிடம் நகைகளை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். ஆனால் தான் அணிந்து வந்திருப்பது கவரிங் நகைகள் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இறுதியாக ஒரு சிறிய தொகையை கொடுத்தால் நீ தப்ப முடியும் எனக் கூறியுள்ளனர். ஆனால் தற்போது பணம் எதுவும் இல்லை என சொல்லி சமாளிக்க அந்த பெண்ணை எச்சரித்து சென்றுள்ளனர்.
போலீசில் புகார்
அப்பெண் வீட்டுக்கு வந்து அனைத்து சம்பவங்களையும் தனது கணவரிடம் சொல்லி இருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த கணவன் மனைவியுடன் சென்று காரைக்குடி போலீசாரில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரைக்குடி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஹரிஹரசுதன், கோகுல் சந்தோஷ், வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என நான்கு பேரையும் கைது செய்தனர்.