Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விழுப்புரத்தில் கண்டெடுக்கப்பட்ட 1,300 ஆண்டுகள் பழமையான முருகன் கற்சிற்பம்.. வியப்பூட்டும் தகவல்கள்!

1300 Years Old Ancient Murugan Sculpture | தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விழுப்புரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் கண்டெடுக்கப்பட்ட 1,300 ஆண்டுகள் பழமையான முருகன் கற்சிற்பம்.. வியப்பூட்டும் தகவல்கள்!
முருகன் சிலை
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 27 Aug 2025 14:37 PM

விழுப்புரம், ஆகச்ட் 27 : விழுப்புரத்தில் (Villupuram) பல நூற்றாண்டுகள் பழமையான முருகன் கற்சிற்பம் (Murugan Stone Statue) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கரையோரம் கண்டெடுக்கப்பட்ட இந்த சிற்பம் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், விழுப்புரத்தி கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த கற்சிற்பத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன, அது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விழுப்புரத்தில் கண்டெடுக்கப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கற்சிற்பம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த கப்பியாம்புலியூரில் உள்ள தாமரைக்குளம் பகுதியில் ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அந்த பகுதியில் கரையோரம் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கற்சிற்பம் ஒன்று  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு சிற்பமாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க : Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. கோயில்களில் குவியும் பக்தர்கள்!

முருகன் கற்சிற்பம் குறித்து விளக்கிய ஆய்வாளர் செங்குட்டுவன்

இது குறித்து அராய்ச்சியாளர் செங்குட்டுவன் கூறுகையில், தமிழர்களின் தெய்வமான முருகனுக்கு தமிழ் இலக்கியங்களில் பல்வேறு வாகனங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பிணி முகம் என யானை குறிப்பிடப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கம்பியாம்புலியூரில் முருகன் கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கற்சிலையில் யானை மீது அமர்ந்து முருகன் பவனி வரும் காட்சி அழகிய சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. துடிதுடித்து பறிபோன இரு உயிர்.. சென்னையில் சோகம்!

1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிபி 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கற்சிற்பம்

இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள முருகன் கற்சிற்பம் பல்லவர் காலத்தை அதாவது கிபி 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இது சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய சிற்பமாகும்.  வருவாய்துறை பாதுகாப்பில் இருந்தால், இந்த சிற்பத்தை விழுப்புரம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தலாம் என்றார். இந்த ஆய்வின் போது தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், கிராம உதவியாளர் முரளி, ஓய்வு பெற்ற அகில இந்திய வானொலி அதிகாரி சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரத்தில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.