Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி பலி.. பெற்றோர் செய்த கொடூரம்.. திருவள்ளூரில் அதிர்ச்சி!

Tiruvallur Illegal Abortion : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். பெற்றோரே வலுக்கட்டாயமாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி பலி.. பெற்றோர் செய்த கொடூரம்.. திருவள்ளூரில் அதிர்ச்சி!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 29 Aug 2025 07:17 AM

திருவள்ளூர், ஆகஸ்ட் 29 : திருவள்ளூர் மாவட்டத்தில் கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கருக்கலைப்பு செய்த பிறகு, சிறுமி உடல்நலக் குறைவால் அவதிப்பபட்டு வந்த நிலையில், உயிரிழந்துள்ளார்சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வது பெருங் குற்றமாகும். ஆனால், பலரும் மருத்துவமனைக்கு செல்லாமல், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், வீட்டிலேயே மாத்திரை வாங்கி கருக்கலைப்பு செய்து வருகின்றனர். இதனால், பெண்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான் திருவள்ளூரில் நடந்துள்ளதுதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் நிர்சிங் படித்து வந்தார். ஆர்.கே.பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமிக்கு கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டுள்ளார்.

மேலும், வயிறும் பெரிதாக காணப்பட்டது. இதனை பார்த்த சிறுமியின் பெற்றோர், அவரை ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, திருத்தணியைச் சேர்நத் 17 வயது சிறுவனை காதலித்து, அவருடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது. மேலும், இருவரும் சகோதரர்கள் உறவு முறை கொண்டவர்கள் என்பது தெரிந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த இரு வீட்டாரும், அவர்களை பிரிந்து அழைத்து சென்றிருக்கின்றர்.

Also Read : யாருப்பா நீ? பாம்பு பிடிக்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. இந்த தவறை பண்ணாதீங்க!

கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி பலி

இதனை அடுத்து, சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய பெற்றோர் முடிவு எடுத்தனர். இதற்காக சிறுமியை ஆந்திராவில் உள்ள பண்னூரில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர். இதனை அடுத்து, சிறுமியை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். இதனை அடுத்து, சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதனால், சிறுமியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு இரண்டு வாரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read : சாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர் கல்லை போட்டு கொலை!

இதற்கிடையில், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவமனை செவிலியரை கைது செய்தனர். மேலும், சிறுமியை காதலித்து 17 வயது சிறுவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருத்தணியில் கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.