இரண்டரை வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தந்தை – மதுரை அருகே பரபரப்பு
Crime News : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனது இரண்டரை வயது மகளை, தான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு அழைத்து சென்று சாக்கு மூட்டையில் அடைத்து வைத்திருக்கிறார். பின்னர் தனது குழந்தையை காணவில்லை என நாடகமாடியிருக்கிறார். போலீசார் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.

மதுரை (Madurai) மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் பாண்டிசெல்வம். இவர் மனைவியை பிரிந்த நிலையில் இரண்டரை வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் பாண்டிசெல்வம் தனது மகளை தான் வேலை பார்த்து வந்த நிறுவனத்துக்கு அழைத்து சென்றதாகவும் தான் பணியில் இருந்த நேரத்தில் அங்கு இருந்த தனது மகளை காணவில்லை எனவும் திருமங்கலம் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காவல் துறையின் விசாரணையில் பாண்டிசெல்வமே தனது மகளை கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகளைக் கொன்று நாடகமாடிய தந்தை
திருமங்கலத்தை சேர்ந்த பாண்டி செல்வம் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது மகளை தான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு அழைத்து சென்றதாகவும் அங்கு தனது மகளைக் காணவில்லை எனவும் போலீசில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருமங்கலம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாண்டிசெல்வம் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனையடுத்து அங்கு வேலைபார்த்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவத்திருக்கின்றனர். அப்போது பாண்டிசெல்வத்தின் மகள் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க : அட்வைஸ் பண்ண சென்ற இடத்தில் இளைஞர் கொலை.. தாய் உட்பட 6 பேர் கைது!




இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் பாண்டிசெல்வமே தனது மகளைக் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வைத்திருக்கிறார் என்ற உண்மை தெரியவந்திருக்கிறது. எதற்காக கொலை செய்தார் என்ற கோணத்தில் பாண்டிசெல்வத்திடம் காலவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகன்றனர். பெற்ற தந்தையே தனது இரண்டரை வயது மகளை கொலை செய்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறித்த ஊழியர்.. பயத்தில் நகையை விழுங்கியதால் அதிர்ச்சி!
தந்தை எடுத்த விபரீத முடிவு
முன்னதாக திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பழனியப்பன் என்ற கட்டிட தொழிலாளி தனது மகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பழனியப்பனின் மற்ற மகன் மற்றும் மகளுக்கு திருமணமான நிலையில், மகள் தனலட்சுமிக்கு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்துள்ளார். இதனால் அவருக்கு திருமணம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனியப்பன், தன் மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்து சில நாட்களிலேயே, மதுரை மாவட்டத்தில் திருமங்கலத்தில் தனது மகளை கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.