Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பயணிகளே அலர்ட்.. சென்னையில் மின்சார ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து.. எந்தெந்த ரூட்ல?

Chennai EMU Train Cancelled : சென்னையில் இரண்டு நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் 5 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

பயணிகளே அலர்ட்.. சென்னையில் மின்சார ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து.. எந்தெந்த ரூட்ல?
சென்னை மின்சார ரயில்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 29 Aug 2025 09:44 AM

சென்னை, ஆகஸ்ட் 29 : சென்னையில் இரண்டு நாட்களுக்கு மின்சார ரயில் சேவை ரத்து (Chennai EMU Train Cancelled) செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல் – கூடூர் வழிதடத்திலும், அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்திலும் மின்சார ரயில்கள் 2025 ஆகஸ்ட் 29,31ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை.   மின்சார  ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.  கல்லூரி மாணவர்கள்,  வேலைக்கு செல்பவர்கள் என பலரும் சென்று வருகின்றனர். சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, வேளச்சேரி – கடற்கரை உள்ளிட்ட வழித்தடங்களில் தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  பயணிகளுக்கு சீரான பயணத்தை வழங்க அவ்வப்போது தெற்கு ரயில்வே சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்

பராமரிப்பு பணிகளின்போது, குறிப்பிட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது இரண்டு நாட்களுக்கு மின்சார  ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. அதாவது,  சென்னை சென்டிரல்கூடூர் வழித்தடத்தில் பொன்னேரிகவரப்பேட்டை இடையே பராமரிப்பு பணிகள் 2025 ஆகஸ்ட் 29, 31ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. நள்ளிரவு 12.30 முதல் காலை 5.30 மணி வரை 5 மணி நேரத்திற்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Also Read : பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. பிங்க் ஆட்டோ வாங்க செம்ம சான்ஸ்… விண்ணப்பிக்க அழைப்பு

சென்னையில் மின்சார ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து


இதன் காரணமாக, அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 11.20 மணிக்கு சென்டரல்கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் ரயிலும், இரவு 9.25 மணிக்கு கும்மிடிப்பூண்டிசென்ட்ரல் இடையே இயக்கப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி பலி.. பெற்றோர் செய்த கொடூரம்.. திருவள்ளூரில் அதிர்ச்சி!

மேலும், 2025 ஆகஸ்ட் 29ஆம் தேதியான இன்று அரக்கோணம்ஜோலார்பேட்டை வழித்தடத்தில் காட்பாடி லட்டேரி இடையே பராமரிப்பு பணிகள் காலை 10.00 முதல் 1.30 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக, காலை 10.30 மணிக்கு காட்பாடிஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் ரயிலும், ஜோலார்பேட்டைகாட்பாடி இடையே மதியம் 12.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.