சென்னை மக்களே அலர்ட்… முக்கிய ரூட்டில் மின்சார ரயில்கள் ரத்து.. எங்கு?
Chennai EMU Train Cancelled : சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்பட்டது. சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 10 : சென்னையில் 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதியான இன்று மின்சார ரயில்கள் ரத்து (Chennai EMU Train Cancelled) செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில்கள். இந்த மின்சர ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இதனால், எப்போதும் மின்சார ரயில்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்ட்ரல் – வேளச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு சீரான பயணத்தை வழங்க அவ்வப்போது பராமரிப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளையொட்டி, சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதியான இன்று சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் கடம்பத்தூர், திருவளங்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையொட்டி, அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், ரயில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




Also Read : திருப்பதி பக்தர்கள் ஹேப்பி.. வெறும் 45 நிமிடத்தில் போகலாம்.. எப்போது முதல் தெரியுமா?
சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து
As part of ongoing Engineering works, Line Block/Power Block is permitted in #Chennai Central – #Arakkonam section between #Kadambattur and #Tiruvalangadu railway on 09th & 10th August 2025.#RailwayUpdate pic.twitter.com/8nhAkSwwuH
— DRM Chennai (@DrmChennai) August 9, 2025
அதன்படி, சென்ட்ரல் இருந்து காலை 5 மணிக்கு திருவள்ளூர் செலும் ரயில், சென்ட்ரலில் இருநது காலை 5.30 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில், திருவள்ளூரில் இருந்து காலை 5.55 மணிக்கு புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், விரைவு ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் ரயில் செல்வதால், பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் மின்சார ரயில்கள் நிற்காது.
Also Read : 90’s வைபுக்கு ரெடியாகுங்க.. சென்னைக்கு மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பஸ்.. எந்த ரூட்ல தெரியுமா?
அதாவது, காலை 6.20 மணிக்கு ஆவடி அரக்கோணம் செல்லும் ரயில், காலை 6 மணிக்கு சென்ட்ரல் திருத்தணி செல்லும் ரயில், காலை 5.40 மணிக்கு கடற்கரை திருவள்ளூர் செலுலும் ரயிலும், காலை 6.30 மணிக்கு அரக்கோணம் சென்ட்ரல் செல்லும் ரயிலும் மேற்கண்ட நான்கு ரயில் நிலையங்களில் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் – ஆவடி இடையே இயக்கப்படும் 2 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.