Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருப்பதி பக்தர்கள் ஹேப்பி.. வெறும் 45 நிமிடத்தில் போகலாம்.. எப்போது முதல் தெரியுமா?

Chennai - Tirupati Highway : சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்கள் இந்த பணிகள் முடிவடைகிறது. இதன் மூலம், சென்னை திருப்பதி இடையேயான பயண நேரம் 45 நிமிடங்கள் குறையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இரண்டு மணி நேரத்தில் பக்தகர்கள் ஈஸியாக பயணிக்கலாம்.

திருப்பதி பக்தர்கள் ஹேப்பி.. வெறும் 45 நிமிடத்தில் போகலாம்..  எப்போது முதல் தெரியுமா?
சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 09 Aug 2025 20:31 PM

சென்னை, ஆகஸ்ட் 09 :  சென்னைதிருப்பதி  (Chennai To Tirupati Highway) நான்கு வழிச்சாலை பணிகள் இன்னும் சில வாரங்களில் நிறைவடையும் என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, சென்னைதிருப்பதி இடையேயான பயண நேரம் 45 நிமிடம் குறையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில், சாலையின் ஓரத்தில் மரக்கன்றுகள் வளர்ப்பதால் மாசு தணியும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இது திருப்பதி பக்தர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைதிருப்பதி முக்கியமான வழித்தடமாக உள்ளது. திருப்பதிக்கு தினமும் சென்னையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக, சாலை மார்க்கமாக சென்று வருகின்றனர். சென்னை திருப்பதிக்கு சுமார் 135 முதல் 150 கிலோ மீட்டர் தூரமாகும். திருவள்ளுர், திருத்தணி வழியாக திருப்பதிக்கு சென்று வருகின்றனர். ஆனால், இந்த வழித்தடம் தற்போது இரண்டு வழிப்பாதையாக உள்ளது.

இதனால், மக்களுக்கு சிரமமாக உள்ளது. இதனால், இந்த வழித்தடத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. அதாவது, திருநின்றவூர் மற்றும் திருவள்ளூர் இடையேயான 18 கி.மீ பசுமைவழி நெடுஞ்சாலையின் நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த பகுதி திருப்பாச்சூரில் உள்ள திருவள்ளூர் புறவழிச்சாலையையும், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையும், திருநின்றவூரில் உள்ள வேப்பம்பட்டு புறவழிச்சாலையுடன் இணைக்கிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, மொத்தமுள்ள 18 கி.மீ நீளத்தில் 15 கி.மீ நீளம் நிறைவடைந்துள்ளது.

Also Read : இனி ஈஸியா போகலாம்.. மரக்காணம் – புதுச்சேரி 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்

சென்னை டூ திருப்பதி நெடுஞ்சாலை

இதற்கு ரூ.304 கோடி மதிப்பில் விரிவுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதற்கான பணிகள் 2022ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த நிலையில், தற்போது இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில வாரங்களில் முழுமையாக முடிவடையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், சென்னை திருப்பதி பயண நேரம் இரண்டு மணி நேரமாக குறையும். கிட்டதட்ட 45 நிமிடங்கள் குறையும்.

இது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், திருத்தணி வழியாக செல்லும் வாகனங்களுக்கு பெரிதும் உதவும். அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசலும் இருக்காது. அதே நேரத்தில், திருவள்ளூர்தமிழ்நாடுஆந்திரா எல்லை வரையிலான 44 கி.மீ பகுதியும் நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

Also Read : இனி கன்னியாகுமரியில் படகு சவாரிக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணலாம் – எப்படி செய்வது?

மேலும், சென்னைதிருப்பதி நெடுஞ்சாலை பசுமை வழிச்சாலையாகயும் மாற உள்ளது. சாலைப்பணிகள் முடிந்த பகுதிகளில் மரக்கன்றுகள், பூச்செடிகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடுவதால், மாசு தணியும் என அதிகாரிகள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.