இனி ஈஸியா போகலாம்.. மரக்காணம் – புதுச்சேரி 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்
Marakkanam Puducherry Highway : மரக்காணம் மற்றும் புதுச்சேரி இடையே ரூ.2,157 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மூலம் போக்குவரத்து சீராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 08 : மரக்காணம் மற்றும் புதுச்சேரி இடையே நான்கு வழிச்சாலைக்கு (Marakkanam Puducherry Highway) மத்திய அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.2,157 கோடிக்கு இந்த சாலை பணிகளை மேற்கொள்ள மத்திய நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது நான்கு வழிச்சாலையாக மாறும் பட்சத்தில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவை விரைவாக இருக்கும். நாடு முழுவதும் சாலை போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மக்களிடையே சீரான போக்குவரத்தை ஏற்படுத்த நெடுஞ்சாலைகளை மத்திய அரசு விரிவுபடுத்தியும் வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தும் வருகிறது. அதில், சாலைகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
அண்மையில் கூட பரமக்குடி ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சர்கள் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மரக்காணம் புதுச்சேரி இடையே நான்கு வழி சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. டெல்லியில் 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதி இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது அதில் தான் தற்போது புதுச்சேரி மரக்காணம் இடையே நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.




Also Read : இனி கன்னியாகுமரியில் படகு சவாரிக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணலாம் – எப்படி செய்வது?
மரக்காணம் – புதுச்சேரி 4 வழிச்சாலைக்கு ஒப்புதல்
மரக்காணம் – புதுச்சேரி 4 வழி நெடுஞ்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 🛣️
▶️₹2,157 கோடி செலவில் 46 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
▶️சென்னை, புதுச்சேரி விமான நிலையங்கள், கடலூர் துறைமுகங்களை இணைக்கும்.
▶️சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து விரைவாகும்.#CabinetDecisions pic.twitter.com/BFpteMfqfH
— PIB in Tamil Nadu (@pibchennai) August 8, 2025
தற்போது மரக்காணம் – புதுச்சேரி நெடுஞ்சாலை இருவழிச்சாலையாக உள்ளது. இதில் புதுச்சேரி, விழுப்புரம், மற்றும் நாகப்பட்டினத்திற்கு இந்த இருவழிச்சாலை பயன்படுத்த வேண்டி உள்ளது. இதனால், 332A (NH-332A) நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து இருக்கும். இதனை கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சரவை மரக்காணம் – புதுச்சேரி இருவழிச்சாலையை 4 வழிச்சாலையை மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.2,157 கோடி மதிப்பில் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து புதுச்சேரிக்கு 46 கி.மீ நீளத்துக்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
Also Read : போராட்டம் தொடர்ந்தால் கைது நடவடிக்கை.. தூய்மை பணியாளர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை..
மேலும், புதுச்சேரி, சின்னபாபுசமுத்திரத்தின் ரயில் நிலையங்கள், சென்னை, புதுச்சேரி விமான நிலையங்கள், கடலூர் சிறு துறைமுகம் ஆகியவற்றுடன் இந்த சாலையை இணைப்பதன் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு சேவையை வேகப்படுத்தும். மரக்காணம் புதுச்சேரி நான்கு வழிச்சாலை பொருளாதார ரீதியாக முக்கிய பங்காற்றும். அதோடு, இந்த திட்டம் மூலம் 8 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும், 10 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.