Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி கன்னியாகுமரியில் படகு சவாரிக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணலாம் – எப்படி செய்வது?

Kanyakumari Boat Ticket Booking : கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வருகின்றனர். இந்த நிலையில் திருவவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரிக்கு டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும் இனி ஆகஸ்ட் 8, 2025 முதல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இனி கன்னியாகுமரியில் படகு சவாரிக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணலாம் – எப்படி செய்வது?
கன்னியாகுமரி படகு சவாரி
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Aug 2025 16:20 PM

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 8 : கன்னியாகுமரியில் (Kanniyakumari) உள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை உலக புகழ்பெற்றது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் (Tourist) வருகை தருகின்றனர். திருவள்ளூவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை ஆகிய இடங்களுக்கு செல்ல படகு சேவையை பயன்படுத்த வேண்டும. இதற்காக பயணிகள் நீண்ட கியூவில் நின்று டிக்கெட் வாங்க வேண்டியிருக்கும். இது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இனி ஆகஸ்ட் 8, 2025 முதல் விவேகானந்தர் பாறை,திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்கு செல்வதற்கு படகு சவாரிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறலாம். இதன் மூலம் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை.

ஆன்லைனில் டிக்கெட் எப்படி பெறுவது?

கன்னியாகுமரியில் படகு சேவைக்கான டிக்கெட் பெற அதிகாரப்பூர்வ இணைய தளமான https://www.psckfs.tn.gov.in/ என்ற பக்கத்துக்கு சென்று பயணி தேதி, நேரம் எத்தனை பேருக்கு டிக்கெட் வேண்டும் என்ற விவரங்களை பதிவிட்டு, யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தி டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்த டிக்கெட்டை பரிசோதகர்களிடம் போனில் காண்பித்தால் போதும். முன்பதிவு செய்த டிக்கெட்டை மாற்றம் செய்யவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது.

இதையும் படிக்க : அரசு செய்தி தொடர்பாளர்களாக 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..

இந்த சேவையை சுற்றுலா பயணிகள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்தனர். இந்த தகவல் அவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆகஸ்ட் விநாயகர் சதுர்த்தி, சுதந்திர தினம் போன்ற முக்கிய பண்டிகைகள் வரவிருப்பதால் விடுமுறையை கழிக்க ஏராளமானோர் கன்னியாகுமரி வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு இந்த வசதி பயணுள்ளதாக இருக்கும்.

இதையும் படிக்க : தமிழகத்தில் வெளுக்கும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அப்டேட்!

கண்ணாடி பாலம்

கன்னியாகுமாரியில் திருவள்ளூவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு இடையே கண்ணாடி பாலம் கடந்த டிசம்பர் 30, 2025 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பாலம்  விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளூவர் சிலைக்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.  இந்த பாலம்  77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்டது. இது சுமார் ரூ.37 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடலின் மேற்பகுதியில் அமைக்கப்பட்ட இந்த பாலத்தில் கடலை பார்த்தபடி நடந்து செல்வது சுற்றுலா பயணிகளுக்கு புது அனுபவமாக இருக்கிறது. இந்த பாலத்தில் நடந்து செல்வதற்காகவே பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இது கடலின் மேல் அமைக்கப்பட்ட முதல் கண்ணாடி பாலம் என்று கூறப்படுகிறது.