Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி? எளிமையான வழி இதோ!

WhatsApp Metro Ticket Process : சென்னை போன்ற பெருநகரங்களில் டிராஃபிக் நமக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இதனால் நாம் இலக்கை அடைய மிகவும் தாமதமாகலாம். அந்த நேரங்களில் மெட்ரோ ரயில் நமது பயணத்தை எளிதாக்குகிறது. இந்த கட்டுரையில் வாட்ஸஅப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவது எப்படி என பார்க்கலாம்.

வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி? எளிமையான வழி இதோ!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 07 Jul 2025 19:10 PM

சென்னை (Chennai) போன்ற பெரு நகரங்களில் வாட்ஸ்அப் நமது பயணங்களை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. பேருந்துகளில் பயணிக்கும்போது டிராஃபிக் போன்ற காரணங்களால் நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைய நீண்ட நேரமாகும். மெட்ரோவில் அந்த பிரச்னை இல்லை. நாம் செல்ல வேண்டிய இடத்தை விரைவாகவும், சிரமம் இல்லாமலும் அடையலாம். ஆனால் மெட்ரோ ரயிலில் (Metro Train) உள்ள மிகப்பெரிய பிரச்னை டிக்கெட் எடுப்பதாகத் தான் இருக்கும். டிக்கெட் எடுக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அதற்குள் நாம் செல்ல வேண்டிய டிரெயின்,  நிலையத்தை விட்டு சென்று விடும்.  இதனால் நம் பயணம் தாமதமாகவோ, தடைபடவோ வாய்ப்பிருக்கிறது. அந்த சிக்கலை தவிர்க்க வாட்ஸ்அப்பின் (WhatsApp) புதிய அம்சம் நமக்கு கைகொடுக்கிறது.

இப்போது நீங்கள் டிக்கெட்டுகளைப் பெற நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யலாம். இந்த வசதி டெல்லி, சென்னை போன்ற  பல நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் உங்கள் மொபைலில் இருந்து சில நிமிடங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான முழுமையான செயல்முறையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் முன்பதிவு குறித்து சென்னை மெட்ரோ எக்ஸ் பதிவு

 

வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?.

  • வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ டிக்கெட் புக் செய்ய முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில்  வாட்ஸ்அப் எண்ணை +91 83000 86000 சேமிக்கவும். இது சென்னைக்கு மட்டுமே இந்த எண்ணை பயன்படுத்த முடியும். மற்ற நகரங்களில் அந்த நகரங்களுக்கான சேவை எண்ணை சேமிக்கவும்.
  • இதற்குப் பிறகு, வாட்ஸ்அப்பை ஓபன் செய்து நீங்கள் ஹாய் என டைப் செய்து நீங்கள் சேமித்த எண்ணுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு சாட்பாட் சில ஆப்ஷன்களை வழங்கும்.  அதில், உங்கள் மெட்ரோ ரயில் ரூட் மற்றும் நீங்கள் செல்ல வேண்டிய ஸ்டேஷன் ஆகியவற்றை தேர்வு செய்யும்.
  • உங்கள் பயணத்தை எங்கிருந்து தொடங்குகிறீர்கள் என்பதை குறிப்பிடவும், பின்னர்  To Station  என்பதில் நீங்கள் செல்ல வேண்டிய ஸ்டேஷனை குறிப்பிடுங்கள். பின்னர் உங்கள் பயணத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கவும். பயணத்தின் தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும். டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை குறிப்பிடுங்கள். அதாவது எத்தனை பேருக்கு நீங்கள் முன்பதிவு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தெரிவியுங்கள்.
  • இப்போது நீங்கள் யுபிஐ, டெபிட்/கிரெடிட் கார்டு போன்ற கட்டண விருப்பங்களைப் பெறுவீர்கள். உங்கள் வசதிக்கேற்ப பணம் செலுத்துங்கள். பணம் செலுத்திய பிறகு, கியூஆர் (QR) குறியீட்டுடன் கூடிய டிக்கெட்டைப் பெறுவீர்கள். மெட்ரோ நிலையத்தின் நுழைவு வாயிலில் இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் பயணத்தைத் தொடங்கலாம்.