Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது!

Chennai Traffic Diversion : சென்னையில் மூன்று தினங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு, 2025 ஆகஸ்ட் 8, 11, 13ஆம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.

வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது!
சென்னயில் போக்குவரத்து மாற்றம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 07 Aug 2025 14:29 PM

சென்னை, ஆகஸ்ட் 07 : சென்னையில் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் (Chennai Traffic Diversion) செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தின (Independence Day 2025) ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு, மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என  மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்த வகையில் தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேத் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகத்தில் நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதற்காக ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதற்க காமராஜர் சாலை மூன்று ஒத்திகை நடைபெற உள்ளது. இதற்காக சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2025 ஆகஸ்ட் 8, 11, 13ஆம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நடைபெற உள்ளது. இதனால், காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை, அமையப்பெற்றுள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Also Read : 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ரிப்போர்ட் இதோ..

சென்னையில் போக்குவரத்து மாற்றம்


சாலை, காமராஜார் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா அண்ணாசாலை. மன்ரோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.

அண்ணா சாலையில் இருந்து பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம். வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை அடையலாம்.

Also Read : ’வெற்றிப்பாதையில் நடைப்போடுவோம்’ – கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு..

ராஜாஜி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், தலைமைசெயலகம் வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல, பாரிமுனை, வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road). ராஜா அண்ணாமலை மன்றம். முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, மன்ரோ சிலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த  வழியை தெரிந்து, வாகன ஓட்டிகள் அதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.