2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ரிப்போர்ட் இதோ..
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் ஆகஸ்ட் 7, 2025 தேதியான இன்று, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 7, 2025: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 2025 ஆகஸ்ட் 7 தேவையான இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 8 2025 தேதியான நாளை திருவண்ணாமலை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இரண்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
அதேபோல் ஆகஸ்ட் 8 2025 தேதியான நாளை நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஆன 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ’வெற்றிப்பாதையில் நடைப்போடுவோம்’ – கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு..
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் 36.2 டிகிரி செல்சியஸ், கரூரில் 36 டிகிரி செல்சியஸ், மதுரையில் 36.4 டிகிரி செல்சியஸ், வேலூரில் 35.4 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 36.3 டிகிரி செல்சியஸ், பதிவானது. சென்னையில் அதிகபட்சமாக 36.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.