Kalaignar Karunanidhi : ’வெற்றிப்பாதையில் நடைப்போடுவோம்’ – கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு..
Kalaignar Karunanidhi Death Anniversary: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஓமந்துரார் மருத்துவமனையில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை பேரணியாக சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்,

சென்னை, ஆகஸ்ட் 7, 2025: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி ஆகஸ்ட் 7,2018 அன்று காலமானார். அவரது ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் இருக்கக்கூடிய ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருக்கும் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார். தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவர் 1969 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றினார். திமுகவின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேல் இருந்தவர்.
கலைஞர் நினைவு தினத்தை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி:
இந்த நிலையில் 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று அவரது ஏழாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய கலைஞர் திருஉருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Also Read: 2538 இளைஞர்களுக்கு பணி.. நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
அதனை தொடர்ந்து அங்கிருந்து மெரினா கடற்கரையில் இருக்கக்கூடிய அவரது நினைவிடம் வரையில் பேரணியாக சென்றார். இந்த பேரணியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, கட்சி பொருளாளர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக மெரினா கடற்கரையில் இருக்கக்கூடிய கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வெற்றிப்பாதையில் நடைபோடுவோம் – முதலமைச்சர் ஸ்டாலின்:
தலைவர் கலைஞர் –
முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும்… pic.twitter.com/YH1tVZql61
— M.K.Stalin (@mkstalin) August 7, 2025
கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில், “ தலைவர் கலைஞர் – முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு! தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!
Also Read: ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்..
அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!” என தெரிவித்துள்ளார். தேபோல் கவிஞரும் வைரமுத்து கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை ஒட்டி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இறந்த பிறகும் நீ புகழப்படுகிறாய் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.