நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது.. இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!
Tamil Nadu Fisherman Arrest : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர், தொண்டியில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேரும் கைதாகி உள்ளனர். மேலும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை, ஆகஸ்ட் 06 : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது (Tamil Nadu Fisherman Arrest) செய்யப்பட்டுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர், தொண்டியில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் (Srilankan Navy) சிறை பிடித்துள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்க் கதையாகி வருகிறது. இலங்கை கடற்படையர்கள் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களை கைது செய்யப்படுவது, தாக்குதல் நடத்துவது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு, அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன.
ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகிறார். தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பலமுறை முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி வலியுறுத்தி இருக்கிறார். இப்படியான சூழலில், 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதியான இன்று தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் ஒரே படங்கில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது, வடக்கு மன்னார் கடற்பரப்பில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.




Also Read : 12 ஆம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்.. அக்கவுடன் பேசுவதை நிறுத்தாததால் வெறிச்செயல்!
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
VIDEO | Ramanathapuram, Tamil Nadu: Sri Lankan Navy arrests 14 Indian fishermen for alleged maritime boundary violation.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/ys2ktkr7Rk
— Press Trust of India (@PTI_News) August 6, 2025
தொண்டியில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். பாம்பன் மீனவர்கள் 10 பேர் உட்பட 14 தமிழக மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த மீனவர்கள், விசாரணைக்காக தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது.
Also Read : சிஆர்பிஎஃப் பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு.. வழக்குப்பதிய தாமதம் செய்ததா காவல்துறை..?
தொடர் கோரிக்கை
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அவர்களது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, இதுபோன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் பலமுறை கடிதம் மூலம் வலியுறுத்தி இருக்கிறார். இருப்பினும், மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. எனவே, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.