தெலுங்கு நட்சத்திர நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் அட்லி முதன்முறையாக இணையும் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பாலிவுட் ஆக்ஷன் ஹீரோ டைகர் ஷெராஃப் இப்படத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பான் இந்தியா ஆக்ஷன் படமான இதில் சில முக்கிய காட்சிகளில் டைகர் ஷ்ராஃப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.