இந்திய கிரிக்கெட்டில் டோப்பிங் சர்ச்சை ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் அணிக்காக விளையாடும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ராஜன் குமார், வரவுள்ள விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட டோப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தேசிய டோப்பிங் தடுப்பு முகமை அவருக்கு தற்காலிக இடைநீக்கம் விதித்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் டோப் பரிசோதனையில் சிக்குவது மிகவும் அரிதானதாக கருதப்படும் நிலையில், இந்த சம்பவம் பிசிசிஐயை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொதுவாக டோப்பிங் சம்பவங்கள் தடகளம் போன்ற உடல் வலிமை மற்றும் திடீர் ஆற்றல் தேவைப்படும் விளையாட்டுகளில் அதிகம் காணப்படுகின்றன.