தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..
Tamil Nadu CM MK Stalin: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நிலையில், முதல் முறையாக இன்று அதாவது ஆகஸ்ட் 4, 2025 தேதியான இன்று தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். அங்கு வின்ஃபாஸ்ட் கார் நிறுவன தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

தூத்துக்குடி, ஆகஸ்ட் 4, 2025: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதேபோல் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று அதாவது ஆகஸ்ட் 4 2025 தேதி ஆன இன்று வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூபாய் 16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று இந்த ஆலையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார் அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மட்டும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது சுமார் ஒரு வார காலம் மருத்துவமனையில் இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நலமுடன் வீடு திரும்பி ஆகஸ்ட் 1 2025 ஆம் தேதி முதல் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கினார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி முதலமைச்சர் முதல்முறையாக தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கார் தொழிற்சாலையை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்:
#TamilNadu CM #MKStalin inaugurated the #Vinfast EV manufacturing plant at #Thoothukudi today#InvestInTN | #Chennai pic.twitter.com/bWtLxUVzjF
— TN Industrial & Investment Updates (@TnInvestment) August 4, 2025
2024 ஆம் ஆண்டு வின்ஃபாஸ்ட் தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக ரூபாய் 1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை இன்று ஆகஸ்ட் 4, 2025 திறப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார்.
காலை 10 மணி அளவில் தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் வின்ஃபாஸ்ட் ஆலைக்கு சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆலையை திறந்து வைத்து. கார் விற்பனையும் தொடங்கி வைத்தார்.
முதல் காரில் கையெழுத்திட்ட முதல்வர்:
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் விஎப் 6, விஎப் 7 ஆகிய கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த கார் தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வின்ஃபாஸ்ட் கார் நிறுவன நிர்வாகிகள், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.