Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பழிக்கு பழி… ஜாமினில் வந்த 21 நாட்களில் கணவன் – மனைவி கொலை – ஒரே நேரத்தில் 2 இடங்களில் வெறிச்செயல்

Revenge Double Murder: திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவை நிர்வகிப்பது தொடர்பான பிரச்னையில் பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழிக்கு பழி… ஜாமினில் வந்த 21 நாட்களில் கணவன்  – மனைவி கொலை – ஒரே நேரத்தில் 2 இடங்களில் வெறிச்செயல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 10 Jan 2026 06:40 AM IST

திண்டுக்கல், டிசம்பர் 10 : திண்டுக்கல் (Dindigul) மாவட்டத்தில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த 21 நாட்களுக்குள் கணவன், மனைவி இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எட்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த ஜேசுராஜ் கென்னடி என்பவர், கோசவப்பட்டியில் புதிய மீன் கடைக்காக இடம் பார்க்க சென்றிருக்கிறார். பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் நத்தம்–திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஆர்.எம்.டி.சி காலனி அருகே பின்னால் வந்த கார் ஒன்று அவரது வாகனத்தை மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜேசுராஜை, காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கினர். உயிர் தப்பிக்க அவர் சாலையில் ஓடியபோதும், அந்த கும்பல் அவரை விரட்டி சென்று சரமாரியாக வெட்டி, தலைப்பகுதியை சிதைத்தது.  இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஒரே நேரத்தில் 2 இடங்களில் நடந்த வெறிச்செயல்

இதனைத் தொடர்ந்து, ஜேசுராஜின் இரண்டாவது மனைவி ஞான தீபிகாவை அவரது யாகப்பன்பட்டி வீட்டிலிருந்து வெளியே அழைத்த அந்த கும்பல், வீட்டின் முன்பே அவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்தது. அவரை காப்பாற்ற முயன்ற அவரது மகன் மற்றும் ஒரு பெண் உறவினருக்கும் வெட்டு காயங்கள் ஏற்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தாலுகா காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் காவல் கண்காணிப்பாளர் பிரதீப், துணை கண்காணிப்பாளர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க : நெல்லையில் ஒரு விசித்திரம்…69 ஆண்டுகளாக வாயில் கல்லுடன் வாழும் முதியவர்…இதுதொடர்பாக அவர் கூறுவதென்ன!

விசாரணையில், ஜேசுராஜ் மற்றும் மயாண்டி ஜோசப் என்பவர் உறவினர்கள் என்பதும், தேவாலய திருவிழாவை நடத்துவது தொடர்பான பிரச்னையில் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததிருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 23 தேதி, மயாண்டி ஜோசப்பை ஜேசுராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ஜேசுராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கடந்த 2025 ஆம் ஆண்டு  டிசம்பர் 19 ஆம் தேதி, மதுரை சிறையிலிருந்து ஜேசுராஜ் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.

இதையும் படிக்க : 40 வயது மருத்துவருடன் காதல்.. அறையில் பிணமாக கிடந்த மாணவி.. தோண்ட தோண்ட வெளிவந்த பகீர் தகவல்கள்!

இதனை அறிந்த மயாண்டி ஜோசப்பின் உறவினர்கள், ஜேசுராஜை தொடர்ந்து கண்காணித்து, திட்டமிட்டு தாக்கி கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜாமீனில் வெளியே வர உதவிய காரணத்திற்காக அவரது மனைவி தீபிகாவையும் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இரட்டைக் கொலை வழக்கில் ஞானராஜ், தர்மர், அருள், ஜான் பீட்டர் உள்ளிட்ட எட்டு பேரை காவல்துறை கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முன்பகை காரணமாக ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.