நெல்லையில் ஒரு விசித்திரம்…69 ஆண்டுகளாக வாயில் கல்லுடன் வாழும் முதியவர்…இதுதொடர்பாக அவர் கூறுவதென்ன!
Tirunelveli Old Man Living With Stone In Mouth: திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி காலத்தில் இருந்து தற்போது வரை சுமார் 69 ஆண்டுகளாக வாயில் கல்லுடன் முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இது தொடர்பாக அந்த முதியவர் கூறியது விசித்திரமாக உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது முக்கூடல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பாலகன் தெருவில் 80 வயதான கோவிந்தசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர், தனது சிறு வயது முதல் சுமார் 69 ஆண்டுகளாக தனது வாயில் ஒரு சிறிய அளவிலான கல்லை வைத்துக் கொண்டு தற்போது வரை வாழ்ந்து வருகிறார். இது தொடர்பாக, முதியவர் கோவிந்தசாமி கூறியதாவது: நான் கடந்த 1956- ஆம் ஆண்டு முக்கூடல் பகுதியில் உள்ள சொக்கலால் அரசு பள்ளியில் 6- ஆம் வகுப்பு படித்து வந்தேன். அப்போது, எனது வகுப்பில் சரியாக வாய் பேச முடியாத மாணவர் ஒருவர் என்னுடன் படித்து வந்தார். அவர் வாய் பேச முடியாமல் தவித்து வருவதால், எனது வகுப்பு ஆசிரியர் ஒருவர் வாயில் சிறிய கல்லை போட்டுக் கொண்டு பேச முயற்சிக்குமாறு கூறினார். இதை பார்த்த நானும் எனது நண்பர்களும் விளையாட்டாக நாமும் செய்தால் என்ன என்று எண்ணி என்னுடன் சேர்த்து 10 பேர் வாயில் ஒரு சிறிய அளவிலான கல்லை வைக்க தொடங்கினோம்.
சிறிது நாள்களிலேயே கல்லை வெளியே எடுத்த நண்பர்கள்
ஆனால், ஒரு நண்பர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது பல் உடைந்ததாக கூறி கல்லை வெளியே எடுத்து விட்டார். இதே போல, மற்ற நண்பர்களும் சிறிது நாட்களிலேயே தங்களது வாயில் வைத்திருந்த சிறு கல்லை வெளியே எடுத்து விட்டனர். ஆனால், எனது வாயில் இருந்த சிறிய கல்லை வெளியே எடுக்க விருப்பமில்லை. இதனால், நான் படித்த போதும், வேலை பார்க்கும்போதும், தூங்கும் போதும், குளிக்கும் போதும் இவ்வளவு ஏன் சாப்பிடும் போதும் என அனைத்து நேரங்களிலும் வாயில் இருந்த கல்லை எடுத்தது இல்லை.
மேலும் படிக்க: 40 வயது மருத்துவருடன் காதல்.. அறையில் பிணமாக கிடந்த மாணவி.. தோண்ட தோண்ட வெளிவந்த பகீர் தகவல்கள்!




வாயில் இருந்த கல்லை எடுத்த எனது மனைவி
இவ்வாறாக, சுமார் 69 ஆண்டுகள் இந்த சிறிய கல்லை வாயில் போட்டு வைத்து வருகிறேன். ஒரு முறை நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, எனது மனைவி விளையாட்டாக எனது வாயில் இருந்த கல்லை எடுத்து நெல் மூட்டையில் போட்டு விட்டார். உடனே, அந்த மூட்டையில் இருந்த நெல்லை கொட்டி, அதில் இருந்த கல்லை எடுத்து மீண்டும் எனது வாயில் வைத்துக் கொண்டேன். இந்த விசித்திர பழக்கம் சிறுவயதில் விளையாட்டாக தொடங்கியது. தற்போது வரை அதனை ஒரு பழக்கமாக வைத்து வருகிறேன் என்று தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
இது தொடர்பாக கோவிந்தசாமியின் அண்ணன் மகன் பிரசாத் கூறுகையில், எனது சித்தப்பா சிறுவயதில் இருந்து வாயில் கல்லை வைத்து வருகிறார். இதனை 69 ஆண்டுகளாக செய்து வரும் செயலை ஒரு சாதனையாக பார்க்கிறோம் என்று தெரிவித்தார். 80 வயது முதியவரின் இந்த விநோத செயல் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்கிலில் பரவி வருகிறது.
மேலும் படிக்க: திடீர் இருமலால் முச்சுத் திணறல்…தாயிடம் பால் அருந்திய பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்!