Viral Video : ஐரோப்பாவில் உணவு டெலிவரி செய்யும் இந்தியருக்கு கிடைத்த பேரன்பு.. நெகிழ வைக்கும் வீடியோ!
Europe Man Helped Indian Man | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், ஐரோப்பாவில் உணவு டெலிவரி செய்யும் இந்திய இளைஞருக்கு வெளிநாட்டவர் உதவும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
என்னதான் உலகில் போட்டி, பொறாமை, தீய எண்ணங்கள் நிறைந்திருந்தாலும் சில மனிதர்கள் அன்பு செய்யவே விரும்புகின்றனர். இவ்வாறு சில மனிதர்கள் மிகுந்த அன்பு கொண்டவர்களாக இருப்பது தொடர்பான வீடியோக்கள் சில அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்கள் இந்த பூமியில் இன்னும் அன்பு நீடித்து, நிலைத்து இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக இருக்கும். அந்த வகையில் ஐரோப்பாவில் உணவு டெலிவரி செய்யும் நபருக்கு கிடைத்த அன்பு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ஐரோப்பாவில் உணவு டெலிவரி செய்யும் இந்தியருக்கு கிடைத்த பேரன்பு
தங்கள் வாழ்க்கைக்காக பலரும் பல விதமான கடினமான வேலைகளை செய்கின்றனர். அத்தகைய வேலைகளில் ஒன்று தான் உணவு டெலிவரி செய்வது. உணவு டெலிவரி செய்யும் நபர்கள் மிகவும் கடினமாக உழைக்கின்றனர். இருப்பினும் உணவு ஆர்டர் செய்யும் பலரும் டெலிவரி ஊழியர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்வது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். ஆனால், இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வரும் நிலையில், அவரிடம் வெளிநாட்டவர் ஒருவர் மிகவும் அன்புடன் நடந்துக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : புதினின் செய்தியாளர் சந்திப்பில் காதலிக்கு புரொபோஸ் செய்த நபர்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் உணவு டெலிவரி செய்யும் அந்த நபரிடம் அந்த வெளிநாட்டவர் பேச தொடங்குகிறார். அப்போது அவர் நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், எவ்வளவு வீட்டு வாடகை செலுத்துகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர் பதில் கூறவே உங்களது வீட்டு வாடகையை நான் கொடுக்கிறேன் என்று கூறி அதற்கான பணத்தையும் கொடுக்கிறார். அவரின் செயலை கண்டு அந்த நபர் உணர்ச்சிவசப்படுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : ரூ.40,000க்கு மதிய உணவு சாப்பிட்ட இளைஞர்.. உலகளவில் வரவேற்பை பெறும் இந்திய உணவுகளின் சுவை.. வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வெளிநாட்டவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.