Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.40,000க்கு மதிய உணவு சாப்பிட்ட இளைஞர்.. உலகளவில் வரவேற்பை பெறும் இந்திய உணவுகளின் சுவை.. வைரலாகும் வீடியோ!

Rs 40,000 Indian Meal: இந்த சிறப்புத் தொடர் மெனுவில் மலர் வடிவில் வடிவமைக்கப்பட்ட தோக்லா, காளான் காலேட்டி, மெதுவடை, பன்னீர் கோஃப்தா, தயிர் சாட் உள்ளிட்ட பல சைவ உணவுகள் இடம்பெற்றிருந்தன. அந்த உணவுகள் உணர்வையும், சுவையையும் ஒன்றாக்கிய தனி அனுபவமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.40,000க்கு மதிய உணவு சாப்பிட்ட இளைஞர்.. உலகளவில் வரவேற்பை பெறும் இந்திய உணவுகளின் சுவை.. வைரலாகும் வீடியோ!
ரூ.40,000க்கு மதிய உணவு சாப்பிட்ட இளைஞர்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Dec 2025 14:40 PM IST

உலகளவில் இந்திய உணவுகளுக்கான மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள பிரபலமான மிச்செலின் நட்சத்திர விடுதியில், இந்திய உணவக அனுபவம் குறித்து ஒருவர் பதிவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்திய சுவைகளை நவீன வடிவில் அறிமுகப்படுத்தும், இந்த உணவகம் தற்போது பலரின் பேசுபொருளாக மாறியுள்ளது.உணவு என்பது வெறும் பசியை தீர்க்கும் பொருளாக மட்டுமல்ல; அது ஒரு நாட்டின் கலாச்சாரம், மரபு, உணர்வு மற்றும் வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கிறது. அதுபோல், இந்திய உணவு உலகின் மிகச் சிறப்பான சமையல் கலாச்சாரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதனால் இந்திய உணவு வெறும் சுவையை அளிப்பதற்காக மட்டுமல்ல, பாரம்பரியத்தையும், உணர்ச்சி பூர்வமான அனுபவத்தையும் வழங்கும் ஒரு கலையாக்கமாக மதிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : Viral Video : இந்தியரிடம் ஜூசுக்கு பணம் வாங்க மறுத்த ஆப்கானிஸ்தானியர்கள்.. வைரல் வீடியோ!

ரூ.40,000க்கு சைவ உணவு:

அந்தவகையில், சிகாகோவில் இயங்கி வரும் ‘Indienne’ மிச்செலின் ஸ்டார் உணவகத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த அனுஷ்க் சர்மா என்ற இளைஞர், சுமார் ₹40,000 மதிப்பில் வழங்கப்படும் சைவ உணவு மெனுவை ருசித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்திய பாரம்பரிய சமையலை நவீன முறையில் உலக தரத்தில் கொண்டு செல்லும் இந்த உணவகம், உணவு ஆர்வலர்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது.

உணவு பரிமாறும் கலை:

உணவு பரிமாறத் தொடங்குவதற்கு முன், டேபிள் கிளாத்தை சீராக உலர்த்தி விரித்தது முதல் பிறந்தநாள் காரணமாக வழங்கப்பட்ட இலவச ஸ்பெஷல் டிரிங்க் வரை, உணவக சேவைகள் அவரை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த சிறப்புத் தொடர் மெனுவில் மலர் வடிவில் வடிவமைக்கப்பட்ட தோக்லா, காளான் காலேட்டி, மெதுவடை, பன்னீர் கோஃப்தா, தயிர் சாட் உள்ளிட்ட பல சைவ உணவுகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக மலர் போன்ற அழகிய தோக்லாவின் வடிவமைப்பு மற்றும் சுவை, மென்மையான மெதுவடை ஆகியவை உணர்வையும் சுவையையும் ஒன்றாக்கிய தனி அனுபவமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்துடன் செல்ல சிறந்த இடம்:

ஆனால், பானி பூரியில் செய்யப்பட்டது போலியான ஜெல்லி வடிவ மாற்றம் என அதிருப்தி தெரிவித்த அவர், பாரம்பரிய சுவையின் தன்மை சற்று பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், உயர்தர உணவு மற்றும் அழகிய பரிமாற்ற அனுபவம் காரணமாக, குடும்பத்தினருடன் நேரம் செலவிட சிறந்த இடமாக உள்ளதாக இந்த உணவகத்தை பாராட்டியுள்ளார்.

வைரலாகும் வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by Anushk Sharma (@anushkinusa)

அவரது அனுபவத்தை கூறும் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி, இந்திய உணவின் உலகளாவிய வளர்ச்சி, தரம் மற்றும் நவீன மாற்றங்கள் குறித்து இணையத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்திய உணவுகள் உலக உணவுத் தரத்தில் உயர்ந்த இடத்தை பிடித்திருப்பதை இந்த அனுபவம் மீண்டும் நிரூபித்துள்ளது