Viral Video : இந்தியரிடம் ஜூசுக்கு பணம் வாங்க மறுத்த ஆப்கானிஸ்தானியர்கள்.. வைரல் வீடியோ!
Afghans Refused Money From Indian Man | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் இந்திய இளைஞர்களிடம் கடையின் உரிமையாளர் பணம் வாங்க மறுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருவதை போல, இந்தியாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் சிலர் மோசமான அனுபவங்களையும், சிலர் இனிமையான அனுபவங்களையும் பெறுவர். அந்த வகையில், ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற இந்தியர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இந்தியருக்கு ஜூசுக்கு காசு வாங்க மறுத்த ஆப்கானிஸ்தானியர்கள்
இந்தியாவில் இருந்து இளைஞர் ஒருவர் ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் அங்குள்ள ஒரு சாலையோர கடையில் ஜூஸ் குடித்துள்ளார். வழக்கமாக கடையில் ஜூஸ் குடித்து பணம் செலுத்துவதை போல அந்த நபர் பணத்தை எடுத்து கொடுத்துள்ளார். ஆனால், அந்த கடைக்காரர் பணத்தை வாங்க மறுத்துள்ளார். தான் ஒரு இந்தியர் என்பதால் அவர் தன்னிடம் இருந்து பணம் வாங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : மேகாலயாவில் குலத்தை சுத்தம் செய்த போர்ச்சுகல் சுற்றுலா பயணி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அந்த இளைஞர் ஒரு கடையில் ஜூஸ் வாங்கி குடிக்கிறார். பிறகு அந்த ஜூசுக்கான பணத்தை செலுத்துகிறார். அவர் பணத்தை கொடுக்க சென்றபோது அந்த கடையின் உரிமையாளர் பணம் வேண்டாம் என்று மறுக்கிறார். அந்த நபர் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறார்.
இதையும் படிங்க : Viral Video : டெல்லி காற்று மாசால் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை.. தாய் வெளியிட்ட வீடியோ!
அந்த கடையின் உரிமையாளர் மட்டும்னறி, அவருடன் இருக்கும் சிலரும் பணம் வேண்டாம் என்று கூறுகின்றனர். நாங்கள் இந்தியர்களை நேசிக்கிறோம். எங்களுக்கு பணம் தேவையில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.