Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : டெல்லி காற்று மாசால் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை.. தாய் வெளியிட்ட வீடியோ!

Delhi Boy In A Condition To Have Surgery Due To Pollution | டெல்லியில் மிக கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிக கடுமையான உடல்நல சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி காற்று மாசு காரணமாக சிறுவன் அறுவை சிகிச்சை வரை சென்றது குறித்து அவரது தாய் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Viral Video : டெல்லி காற்று மாசால் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை.. தாய் வெளியிட்ட வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Nov 2025 20:31 PM IST

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் டெல்லி மெது மெதுவாக மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நகரமாக மாறி வருகிறது. டெல்லியின் காற்று மாசு தீவிரத்தை உணர்த்தும் விதமாக அவ்வப்போது இணையத்தில் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், டெல்லியின் காற்று மாசு காரணமாக தனது மகன் அறுவை சிகிச்சை வரை சென்றுள்ளதாக தாய் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

டெல்லி காற்று மாசு – அறுவை சிகிச்சை வரை சென்ற சிறுவன்

உலக அளவில் அதிக அளவு காற்று மாசு கொண்ட பகுதிகளில் ஒன்றாக டெல்லி உள்ளது. டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக அங்கு பல பகுதிகளில் வானம் கருமையாக உள்ளது. காற்று மாசால் பலர் கடும் உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர். மூச்சு பிரச்னை உள்ளிட்ட சவால்களை மேற்கொண்டு வருகின்றனர். காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதற்கான தீர்வு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஜப்பானில் வேலை செய்யும் இந்திய இளைஞரின் மாத ஊதியத்தால் சர்ச்சை.. குழப்பத்தில் நெட்டிச்னகள்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Pahwa (@baby.khrisha_jayrit)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது, நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லிக்கு வந்தோம். அதன் பிற்கு எனது மகனின் உடல்நிலை தூசி மற்றும் காற்று மாசு காரணமாக மெல்ல மெல்ல பாதிப்புக்கு உள்ளாகியது. எனது மகனுக்கு தொடர் இருமள், அரிப்பு ஏற்பட தொடங்கியது. அவற்றுக்கு மருந்து கொடுத்தும் குணமாகவில்லை. தற்போது டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசு எனது மகனின் உடல் நிலையை, மிகவும் மோசமானதாக மாற்றிவிட்டது. தற்போது எனது மகன் மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : காரணமே இல்லாமல் பைக்கில் சென்ற இளைஞரை தாக்கிய காவலர்கள்.. ஷாக் வீடியோ!

டெல்லியில் உள்ள குழந்தைகளின் நிலை இது தான். நாங்கள் வரி செலுத்துகிறோம். ஆனால், அரசு அமைதியாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.