Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : மேகாலயாவில் குலத்தை சுத்தம் செய்த போர்ச்சுகல் சுற்றுலா பயணி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Portuguese Tourist Cleans Meghalaya Pond | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், போர்ச்சுகலை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் மேகாலயாவில் உள்ள குலத்தில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : மேகாலயாவில் குலத்தை சுத்தம் செய்த போர்ச்சுகல் சுற்றுலா பயணி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Nov 2025 20:58 PM IST

இயற்கை வளங்கள் மிகுந்த நாடாக இந்தியா உள்ளது. மலைகள்,  நீர்நிலைகள் என எங்கும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. இவ்வாறு இந்தியாவின் இயற்கை அழகின் மீது ஈர்ப்பு கொள்ளும் வெளிநாட்டவர்கள் பலர் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த போர்ச்சுகல் சுற்றுலா பயணி செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேகாலயா குலத்தில் குதித்து சுத்தம் செய்த போர்ச்சுகல் சுற்றுலா பயணி

மேகாலயாவில் உள்ள ஒரு குலத்தில் மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து இருந்துள்ளன. இந்த நிலையில் அங்கு சுற்றுலா சென்றிருந்த போர்ச்சுகல் சுற்றுலா பயணி அதனை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில், அவரே அந்த குலத்தில் இறங்கி சுத்தம் செய்ய தொடங்கியுள்ளார். அதனை அங்கிருந்த இளைஞர் ஒருவர் விடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : இந்த காலத்துல இப்படி ஒரு மனசா.. இணையத்தை கவர்ந்த முதியவரின் செயல்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு குலத்தில் மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் மிதக்கின்றன. அதனை கண்ட அந்த போர்ச்சுகல் சுற்றுலா பயணி உடனே அதில் குதித்து மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து வெளியே போடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : குழந்தை ஸ்மார்ட்போன் பார்க்காமல் இருக்க தாய் போட்ட மாஸ்டர் பிளான்.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அந்த சுற்றுலா பயணியின் செயலை பாராட்டு கருத்து பகிர்ந்து வருகின்றனர்.