Viral Video : ஒரு நாளில் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் மோமோஸ் கடைக்காரர்.. வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!
Momos Vendor Earns 1 Lakh Rupees Daily | பெரும்பாலன நபர்கள் வேலைக்கு செல்வதை விடவும் தொழில் செய்வதை அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையில் மோமோஸ் கடைக்காரர் ஒருவர் தினமும் ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டுவது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மனிதர்களுக்கு பொருளாதாரம் மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியமான அம்சமாக உள்ளது. எனவே பொருளாதாரத்தை உருவாக்க ஒவ்வொருவரும் ஏதேனும் வேலை அல்லது தொழில் செய்ய வேண்டிய கட்டாம உள்ளது. பலர் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், சிலர் சொந்தமாக தொழில் செய்ய விரும்புகின்றனர். அவ்வாறு சிறு தொழில் செய்பவர்கள் வேலைக்கு சென்று சம்பவளம் வாங்கும் நபர்களை விடவும் அதிக வருமானம் பெறுகின்றனர் என்ற கருத்து உள்ளது. தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ அமைந்துள்ளது.
ஒரு நாளில் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் மோமோஸ் கடைக்காரர்
முன்பெல்லாம் படிக்காதவர்கள் தான் வருமானத்திற்காக சுய தொழில் செய்வார்கள் என்ற கருத்து இருந்தது. ஆனால், காலப்போக்கில் அது முற்றிலுமாக மாறிவிட்டது. உதாரணமாக தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்கள் ஒரு வேலைக்கு சென்று வருமானம் ஈட்டுவதை விடவும் தங்களது சொந்த முயற்சியில் தொழில் தொடங்கி அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில், மோமோஸ் கடைக்காரர் ஒருவர் ஒரு நாளில் ரூ.1 லட்சம் சம்பாதிப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : பள்ளி மாணவர்களுக்கு நியூஸ் பேப்பரில் வழங்கப்பட்ட மதிய உணவு.. ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் மோமோஸ் கடை உரிமையாளரிடம் ஒரு நாள் வேலை செய்கிறார். அதனை அந்த இளைஞர் வீடியோ பதிவும் செய்துள்ளார். அதில் அந்த கடையில் ஒரு நாளைக்கு எவ்வளவு வியாபாரம் நடைபெறுகிறது என்பது குறித்து அவர் கூறியுள்ளார். அதாவது, அந்த கடையில் ஒரு நாளைக்கு 950 பிளேட்கள் மோமோஸ் விற்பனை செய்ததாகவும், ஒரு பிளேட் ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் மட்டும் ரூ.1,04,500 வருமானம் ஈட்டியதாக அந்த நபர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : நகை கடையில் திருட முயன்ற பெண்.. 17 முறை கன்னத்தில் அறைந்த நபர்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிச்னகள் கருத்து
மோமோஸ் கடைக்காரரின் ஒருநாள் சம்பளம் குறித்து அறிந்தது நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.