Viral Video : நகை கடையில் திருட முயன்ற பெண்.. 17 முறை கன்னத்தில் அறைந்த நபர்!
Jewelry Shop Theft Attempt Video Goes Viral | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், நகை கடையில் திருட முயன்ற பெண்ணுக்கு 17 முறை கன்னத்தில் அறை விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக எங்கேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் அவை மிக சுலபமாக தெரிய வந்துவிடும். மேலும் சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது தற்போது சுலபமான விஷயமாக மாறிவிட்டது. இந்த நிலையில், நகை கடையில் பெண் ஒருவர் திருட முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
நகை கடையில் திருட முயன்ற பெண்ணுக்கு 17 முறை கன்னத்தில் அறை
அகமதாபாத்தில் உள்ள நகை கடை ஒன்றில் நகை வாங்குவது போல் நடித்த பெண் ஒருவர் நகை திருட முயற்சி செய்துள்ளார். அதனை அறிந்துக்கொண்ட கடைக்காரர், அந்த பெண்ணை கன்னத்தில் மிக கடுமையாக அறைந்துள்ளார். அந்த கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : கடைக்காரர் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
મહિલાએ આંખમાં મરચું નાખ્યું, સોનીએ 25 સેકન્ડમાં 20 લાફા ઝીંક્યા, જુઓ CCTV#ahmedabadnews #ranip #ranipgoldstore #robbery #viralvideo #viralnews #ahmedabadcrime pic.twitter.com/ddwXUjWPFU
— Dinesh Chaudhary (@DineshNews_) November 6, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் நகை கடை ஒன்றில் பெண் ஒருவர் நின்றுக்கொண்டு இருக்கிறார். அவர் தனது முகத்தை துணியை கொண்டு மூடியுள்ளார். கடைக்குள் நுழையும் அந்த பெண் கடைக்காரரிடம் ஏதோ கேட்கிறார். பிறகு தனகு கையில் இருந்த ஏதோ ஒரு பொடியை அந்த கடைக்காரர் மீது வீசுகிறார்.
இதையும் படிங்க : Viral Video : அபராதத்தில் இருந்து தப்பிக்க இப்படியா.. ஹெல்மெட் இல்லாததால் கடாயால் தலையை மறைத்த நபர்!
அந்த பெண்ணின் நோக்கத்தை உணர்ந்துக்கொண்ட கடைக்காரர், அவரை கன்னத்தில் அறைய தொடங்குகிறார். அதாவது சுமார் 17 முறை அவர் அந்த பெண்ணை விடாது கண்ணத்தில் அறைகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.