Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : பள்ளி மாணவர்களுக்கு நியூஸ் பேப்பரில் வழங்கப்பட்ட மதிய உணவு.. ஷாக் வீடியோ!

MP School Mid-Day Meal Issue | மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு நியூஸ் பேப்பரில் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Viral Video : பள்ளி மாணவர்களுக்கு நியூஸ் பேப்பரில் வழங்கப்பட்ட மதிய உணவு.. ஷாக் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 09 Nov 2025 22:55 PM IST

பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ள ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் உலகின் எந்த மூலையில் ஏதேனும் வித்தியாசமான சம்பவங்கள் மற்றும் தவறுகள் நடைபெற்றாலும் அது குறித்து மிக எளிதாக உலகிற்கு தெரிய வந்துவிடும். அந்த வகையில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு நியூஸ் பேப்பரில் உணவு வழங்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

பள்ளி மாணவர்களுக்கு நியூஸ் பேப்பரில் வழங்கப்பட்ட மதிய உணவு

மத்திய பிரதேசத்தில் உள்ள ஷெபூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு நியூஸ் பேப்பரில் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனை யாரோ வீடியோ பதிவு செய்த நிலையில், அது இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : இந்தியர்களை போல யாராலும் உபசரிக்க முடியாது.. வெளிநாட்டு சுற்றுலா பயணியின் வீடியோ வைரல்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பள்ளியின் வெளியே சில மாணவர்கள் அமர்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு நியூஸ் பேப்பரில் உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் நீயூஸ் பேப்பரில் வழங்கப்பட்ட உணவை சாப்பிடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : கடைக்காரர் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் பட்சத்தில் அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.