Viral Video : இந்தியர்களை போல யாராலும் உபசரிக்க முடியாது.. வெளிநாட்டு சுற்றுலா பயணியின் வீடியோ வைரல்!
Foreign Tourist Video About Indians Goes Viral | இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா குறித்து வெளியிடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா குறித்த தங்களது அனுபவங்களை பகிரும் வீடியோ நாளுக்கு நாள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், இந்தியர்களின் அனுசரிப்பு குறித்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் அந்த சுற்றுலா பயணி என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உபசரிப்பில் இந்தியர்களை அடித்துக்கொள்ளவே முடியாது
பல வகையான கலாச்சாரம், மொழி, பாரம்பரியம் என இந்தியா பன்முக தன்மைகளை கொண்டுள்ளது. இவற்றின் மீது ஈர்ப்புக்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சில நாட்கள் தங்களது அனுபவத்தை பெறுகின்றனர். அதுமட்டுமன்றி, இந்தியா குறித்த தங்களது அனுபவங்களையும் அவர்கள் உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில், தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது அந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியின் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : சிங்கத்துடன் இப்படி ஒரு உறவா.. வியக்க வைக்கும் நபர்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசும் வெளிநாட்டு சுற்றுலா பயணி மூன்று நாட்களுக்கு முன்பு நான் கவுரவை சந்தித்தேன். அவர் என்னை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எனக்கு சாப்பிட உணவு வழங்கினார். அவரது குடும்பத்துடன் திருமண விழாவுக்கு சென்றேன். நாங்கள் தங்க கோயிலுக்கு சென்றோம். இந்தியர்களை போல யாராலும் உபசரிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : புலிக்கு மது கொடுத்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. உண்மையா?
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இதுதான் இந்தியர்கள் பண்பு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ இதுவரை 90,000 லைக்குகளை பெற்றுள்ளது.