Viral Video : குதிரையில் Patrol சென்ற துபாய் போலீஸ்.. வைரல் வீடியோ!
Dubai Police Horse Patrol Goes Viral | பொதுமக்களின் பாதுகாப்புக்காக போலீசார் அவ்வப்போது ரோந்து செல்வது வழக்கம். அந்த வகையில், துபாயில் காவலர்கள் குதிரையில் ரோந்து பணியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். சில வீடியோக்கள் நாம் பார்க்காத பல புதிய விஷயங்களை நமக்கு கர்ப்பிக்கும் விதமாக இருக்கும். அந்த வகையில், துபாய் சாலைகளில் போலீசார் குதிரையில் ரோந்து பணியில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
குதிரையில் ரோந்து செய்த துபாய் போலீஸ்
ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை விட வித்தியாசமானதாக இருக்கும். மொழி, கலாச்சாரம், உணவு, உடை என அனைத்தும் வேறுபட்டு இருக்கும். இவ்வாறு வெளிநாடுகளில் வித்தியாசமாக இருக்கும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், துபாய் போலீசார் குதிரையில் ரோந்து பணியில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் போலீசார் பைக், ஜீப், கார் உள்ளிட்ட வாகனங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ளும் நிலையில், துபாய் போலீசார் குதிரையில் ரோந்து பணியில் ஈடுபட்டது தற்போது பேசுபொருளாக உள்ளது.




இதையும் படிங்க : Viral Video : இந்திய ரயில்கள் தான் பெஸ்ட்.. புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு பயணி!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பொதுமக்கள் சாலைகளில் நடந்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையின் மீது குதிரையின் மீது இரண்டு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் போலீசார் எப்படி இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார், ஜீப் என ரோந்து பணிகளில் ஈடுபடுவார்களோ அதேபோல அவர்கள் குதிரைகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த காவலர்கள் அணிந்திருக்கும் சீருடை போலவே அந்த குதிரைகளில் கால்களிலும் பேட்ஜ்கள் அணிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : Viral Video : சிறுவனின் காதில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சியை எடுத்த மருத்துவர்.. ஷாக் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.