Viral Video : கடைசி நேரத்தில் வேலை செய்யாமல் போன யுபிஐ.. சமோசா விற்பவரிடம் சிக்கிய நபர்!
Man Suffered After UPI Payment Fails in Railway Station | பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யுபிஐ செயலிகளை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமோசா வாங்க யுபிஐ பயன்படுத்திய நபர் சிக்கலில் சிக்கிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது கையில் பணம் வைத்து செலவு செய்வதில்லை. அவர்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளையே பண பரிவர்த்தனைக்காக (Money Transaction) நம்பியுள்ளனர். யுபிஐ செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதாக உள்ளதால் பலரும் அதனை பயன்படுத்துகின்றனர். ஆனால், வெறும் யுபிஐ செயலிகளை மட்டுமே நம்பியுள்ளது நம்மை சிக்கலில் சிக்க வைத்துவிடும். அந்த வகையில், யுபிஐ செயலியை நம்பி சமோசா சாப்பிட்ட நபர் ஒருவர் எதிர்க்கொண்ட கடுமையான சிக்கல் குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கடைசி நேரத்தில் வேலை செய்யாமல் போன யுபிஐ – சமோசா விற்பவரிடம் சிக்கிய நபர்
பெரும்பாலான பொதுமக்கள் கடைகளில் பொருட்களை வாங்கும்போது பணம் செலுத்த யுபிஐ செயலிகளையே பயன்படுத்துகின்றனர். யுபிஐ செயலிகள் விரைவானதாக இருந்தாலும், அவை எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யாமல் போகலாம். நெட்வொர்க் சிக்கல், சர்வர் பிஸி உள்ளிட்ட சிக்கல்கள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அந்த வகையில் ரயில் நிலையத்தில் சமோசா வாங்கிய நபர் அதற்காக பணம் செலுத்த முடியாமல் சிக்கி தவித்த சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : பிளாஸ்டிக் குப்பை தொட்டியை உடைக்க போராடிய கரடி.. கியூட் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒருவர் ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டு இருக்கிறார். அங்கு இருக்கும் சமோசா விற்பனை செய்பவரிடம் இருந்து அவர் சமோசா வாங்கிய நிலையில், அதற்காக தனது யுபிஐ செயலி மூலம் பணம் செலுத்துகிறார். ஆனால், அவரால் பணம் செலுத்த முடியாமல் போகிறது. இதற்கு இடையே அவர் பயணம் செய்யும் ரயில் புறப்படுகிறது. அதனை கண்டு அவர் ரயிலுக்கு செல்ல முயற்சி செய்கிறார். ஆனால், அந்த கடைக்காரர் விடாமல் அந்த நபரை பிடித்துக்கொண்டு பணம் கொடுக்க கூறி கட்டாயப்படுத்துகிறார். அந்த நபர் வேறு வழி இன்றி தான் கையில் கட்டி இருந்த கை கடிகாரத்தை அந்த வியாபாரியிடம் கொடுக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : ரயிலில் மீண்டும் கழிவி பயன்படுத்தப்பட்ட Use and Throw கப்புகள்?.. வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில் அந்த கடைக்காரரின் செயலை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.