Viral Video : பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த சிறுவன்.. கட்டிலுடன் தூக்கிச் சென்ற உறவினர்கள்!
Boy Carried to School on Cot After Refusing | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த சிறுவனை அவரது உறவினர்கள் கட்டிலுடன் தூக்கிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில ஆச்சர்யமூட்டும் விதமாகவும், சில அதிர்ச்சியூட்டும் விதமாகவும் இருக்கும். இன்னும் சில வீடியோக்கள் சிரிப்பை வரவழைக்கும் விதத்தில் இருக்கும். இவ்வாறு நாள்தோறும் பல விதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த சிறுவனை அவரது குடும்பத்தினர் கட்டிலுடன் சேர்த்து பள்ளிக்கு தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த சிறுவன் – கட்டிலுடன் தூக்கிச் சென்ற உறவினர்கள்
சிறு வயதில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் சிறுவர்களுக்கு மிகவும் கசப்பானதாக இருக்கும். பள்ளிக்கு செல்லவே மாட்டேன் என அடம் பிடிக்காமல் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் ஒரு சிலர் தான் இருப்பார்கள். அவ்வாறு பிள்ளைகள் அடம் பிடித்தாலும் எப்படியாவது அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்திவிட வேண்டும் என்று பெற்றோர் முயற்சி செய்வர். அந்த வகையில், பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த சிறுவனை அவரது உறவினர்கள் கட்டிலுடன் தூக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : சிறுவனின் காதில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சியை எடுத்த மருத்துவர்.. ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
बच्चा स्कूल न जाने के लिए रोने लगा। पेरेंट्स ने थोड़ा पीट दिया फिर बच्चा रोते हुए चारपाई से चिपक गया, उसके बाद जो हुआ वो आप भी देख लो😂😂
— Jaiky Yadav (@JaikyYadav16) October 31, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இருவர் கட்டிலை தூக்கிக்கொண்டு வருகின்றனர். அதனை பார்ப்பதற்கு அவர்கள் வெறும் கட்டிலை தூக்கிக்கொண்டு செல்வதை போல தெரிகிறது. ஆனால், அந்த கட்டிலில் சிறுவன் ஒருவர் படுத்துக்கொண்டு இருக்கிறார். அந்த சிறுவன் பள்ளிக்கு செல்ல அடம் பிடித்ததால் அவர்களது உறவினர்கள் கட்டிலுடன் தூக்கிச் சென்றது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.
இதையும் படிங்க : Viral Video : மகள்களை தூக்கத்தில் இருந்து எழுப்ப Band வைத்த தாய்.. இணையத்தை கலக்கும் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அதற்கு பல விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.