Viral Video : இதுதான் ஒழுக்கம்.. சூரையாடப்பட்ட கடையில் இருந்து ஆடைகளை எடுத்த மனைவி.. கணவன் செய்த செயல்!
Husband Stops Wife from Looting in France Protests | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பிரான்ஸில் சூரையாடப்பட்ட கடையில் இருந்து உடைகளை எடுத்து வந்த மனைவியை கணவன் கண்டித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். சில வீடியோக்கள் மனிதர்கள் எவ்வளவு மோசமான குணங்களை கொண்டவர்கள் என்பதை காட்டும் விதமாகவும், சில வீடியோக்கள் என்ன நடந்தாலும் தங்களது சுய ஒழுக்கத்தை இழக்காத மனிதர்கள் குறித்ததாக இருக்கும். அந்த வகையில் தான், வாய்ப்பு கிடைத்தும் தனது மனைவியை தவறு செய்ய விடாமல் தடுத்த கணவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அவரின் செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடையில் இருந்து ஆடைகளை எடுத்த மனைவி – கணவன் செய்த செயல்
பிரான்ஸில் பொதுமக்கள், மாணவர்கள், இடதுசாரிகள் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து அவர்கள் கடந்த பல நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், பாரிஸில் வெடித்த போராட்டத்தின் காரணமாக அங்கிருந்த கடைகள் சில சூரையாடப்பட்டன. அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : புலிக்கூண்டுக்குள் நுழைந்த இளைஞர்.. அடுத்து நடந்தது என்ன?.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
An angry husband catches his gypsy wife looting stores in France without masking her face https://t.co/RFHW7NVy2e
— Visegrád 24 (@visegrad24) October 18, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சூரையாடப்பட்ட கடையின் முன்பு சில பொதுமக்கள் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அப்போது அந்த கடையில் இருந்து பெண் ஒருவர் கைநிறைய ஆடைகளை அள்ளிக்கொண்டு வருகிறார். அதனை கண்ட அவரது கணவர் மிகுந்த கோபத்திற்கு உள்ளாகிறார். உடனடியாக அவர் தனது மனைவியின் கைகளில் இருந்த ஆடைகளை வாங்கிக்கொண்டு மீண்டும் கடைக்குள் எடுத்துச் சென்று வைக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : ஹண்டிங்டன் பீச்சில் எழுந்த ராட்சத சுனாமி அலைகள்.. வைரலாகும் ஷாக் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அந்த நபரின் செயலை பாராட்டி பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.