IND W vs ZIM W: வீழ்ந்த ஜிம்பாப்வே மகளிர் அணி.. ஒயிட் வாஷ் செய்த இந்திய மகளிர் அணி!
India Women vs Zimbabwe Women 3rd T20I: ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு (IND W vs ZIM W) எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி ஜிம்பாப்வே அணியை 92 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ALSO READ: ஆரம்பத்தில் சொதப்பல்.. பின்வரிசையில் அசத்தல்.. போராடி வென்ற இந்திய மகளிர்!
ஹர்மன்பிரீத் கவுரின் அற்புதமான 91 ரன்கள்:
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியை, ஹர்மன்பிரீத் கவுர் வெறும் 41 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுமட்டுமின்றி, தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மாவும் ஆக்ரோஷமாக விளையாடி, 37 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரின் பேட்டிங்கால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. மேலும், இந்திய அணியில் அனுஷ்கா ஷர்மா 28 ரன்களும், ரிச்சா கோஷ் 1 ரன்னும், நிக்கி பிரசாத் 9 ரன்களும், அருந்ததி ரெட்டி 4 ரன்களும், பிரேமா ராவத் 4 ரன்களும் எடுத்தனர். அதேநேரத்தில், தீப்தி ஷர்மா டக் அவுட் ஆனார்.




ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களில் பீஜா 3 விக்கெட்டுகளையும், நோம்வெலோ சிபண்டா, நியாஷா, டெண்டாய் மகுஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
124 ரன்கள் மட்டுமே ஜிம்பாப்வே அணி:
217 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை. ஷார்னே மயர்ஸ் 60 ரன்களும், பெலவ்ட் பிஜா 44 ரன்களும் எடுத்து பதிலடி கொடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இந்திய பந்துவீச்சாளர்களில், நந்தனி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிராந்தி கௌட், அருந்ததி ரெட்டி, நிக்கி பிரசாத் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். போட்டியின் கடைசி ஓவரில், நந்தனி சர்மா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜிம்பாப்வேயின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம், இந்தியா 92 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ALSO READ: மகளிர் பிரீமியர் லீக் 2027 ஏலம்.. வெளியான 146 வீராங்கனைகள் பட்டியல்..!
ஜிம்பாப்வே அணியை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி:
இந்த வெற்றியின் மூலம், இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா, இறுதிப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி, தொடரை வெற்றிகரமாகக் கைப்பற்றியது.