AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

BCCI Chief Selector: வீரர்களின் உடற்தகுதி முதல் 2027 உலகக் கோப்பை வரை.. தலைமைத் தேர்வாளராக ஓஜா சந்திக்கும் சவால்கள்..!

Pragyan Ojha Cricket Career: பிரக்யான் ஓஜா இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைத் தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திறமையான இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஓஜா, சர்வதேசப் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். சச்சின் டெண்டுல்கரின் பிரியாவிடை டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இப்போது, 2027 உலகக் கோப்பைக்கான அணித் தேர்வில் அவரது தலைமை முக்கியப் பங்காற்றும். அவரது கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் சவால்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.

BCCI Chief Selector: வீரர்களின் உடற்தகுதி முதல் 2027 உலகக் கோப்பை வரை.. தலைமைத் தேர்வாளராக ஓஜா சந்திக்கும் சவால்கள்..!
இந்திய தலைமை தேர்வாளர் பிரக்யான் ஓஜாImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Oct 2026 17:11 PM IST

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் ஆதிக்கம் நிறைந்த காலத்தில் கூட திறமையான பேட்ஸ்மேன்களைக் கூட வீழ்த்திய பிரக்யான் ஓஜா, இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று அதாவது 2026 அக்டோபர் 19ம் தேதி இந்திய ஆண்கள் அணியின் புதிய தலைமைத் தேர்வாளராக முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவை (Pragyan Ojha) நியமித்துள்ளது. இந்நிலையில், பிரக்யான் ஓஜா யார் அவரது கிரிக்கெட் வாழ்க்கை எப்படி இருந்தது என்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், பிரக்யான் ஓஜாவின் கிரிக்கெட் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்வோம்.

ALSO READ: பாண்டியாவுக்கு மாற்று வீரரை தேடாதீங்க.. சுனில் கவாஸ்கரின் முக்கிய அறிவுரை

பிரக்யான் ஓஜா 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி ஒடிசாவின் புவனேஸ்வரில் பிறந்தார். இவர் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர். உள்ளூர் கிரிக்கெட்டில் அவரது சிறப்பான ஆட்டங்கள் அவருக்கு இந்திய அணியில் இடத்தைப் பெற்றுத் தந்தன. அவரது துல்லியமான பந்துவீச்சும், விக்கெட் வீழ்த்தும் திறனும் கிரிக்கெட் உலகில் அவருக்கு ஒரு தனித்துவமான பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.

 ஓஜாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

பிரக்யான் ஓஜா இந்தியாவுக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகள் என 3 வடிவங்களிலும் விளையாடியுள்ளார். அதன்படி, இந்திய அணிக்காக ஓஜா 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 18 ஒருநாள் போட்டிகளில் 21 விக்கெட்டுகளையும், 6 டி20 சர்வதேசப் போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மறக்க முடியாத ஒரு செயல்பாடு, நவம்பர் 2013-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நிகழ்ந்தது. மும்பையில் நடைபெற்ற சச்சின் டெண்டுல்கரின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியில், ஓஜா இரு இன்னிங்ஸ்களிலும் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சிறப்பான ஆட்டத்திற்காக, ஓஜா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐபிஎல் போட்டிகளில் ஓஜாவின் செயல்திறன்:

பிரக்யான் ஓஜா இந்தியன் பிரீமியர் லீக்கில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடினார். இவர் பல போட்டிகளில் தனது சுழற்பந்துவீச்சால் சிறப்பாகச் செயல்பட்டார். பிப்ரவரி 2020-ல், ஓஜா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். பிரக்யான் ஓஜா தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியதன் அடிப்படையில் பிசிசிஐ அவரைத் தலைவராக நியமித்தது. இனி அவர் இந்திய அணிக்கான வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்.

ALSO READ: நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடர்.. 4 அனுபவ வீரர்களை ஒதுக்கிய பிசிசிஐ!

பிரக்யான் ஓஜாவுக்கு முன்னால் என்னென்ன சவால்கள் இருக்கும்?

தலைமைத் தேர்வாளராக, வீரர்களின் செயல்பாடு, உடற்தகுதி மற்றும் அணியின் தேவைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் பொறுப்பு ஓஜாவுக்கு உண்டு. 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான ஆயத்தப் பணிகளில் தேர்வுக் குழுவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். ஓஜாவின் தலைமையில் இந்திய அணித் தேர்வு தொடர்பாக என்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us