AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மழைக்கான ஹாட்ஸ்பாட்டாக மாறும் சென்னை.. இன்று இரவு முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் – வெதர்மேன் பிரதீப் ஜான்..

Chennai Rains: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று பகல் நேரத்தில் திடீரென, குறுகிய நேரத்தில் தீவிரமான மழை பெய்யக்கூடும். இடையிடையே வெயிலும் தென்படலாம். மாலை முதல் மழையின் தீவிரம் அதிகரித்து, இரவு முழுவதும் அவ்வப்போது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை நாளை அதிகாலை வரையிலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்கான ஹாட்ஸ்பாட்டாக மாறும் சென்னை.. இன்று இரவு முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் – வெதர்மேன் பிரதீப் ஜான்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Oct 2026 17:14 PM IST

அக்டோபர் 20, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அக்டோபர் 20ஆம் தேதி இரவு முதல் அக்டோபர் 21ஆம் தேதி காலை வரை கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மழைக்கான முக்கியப் பகுதிகளாக இருக்கும் என அவர் கணித்துள்ளார்.

பிரதீப் ஜான் சொல்லும் தகவல்:

இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் வானிலை அமைப்புகளின் காரணமாக, இலங்கைக்கு அருகே உருவாகியுள்ள மேலடுக்கு வளிமண்டலச் சுழற்சி (Upper Air Circulation) தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கான சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வானிலை அமைப்பு தமிழகத்தின் உள்பகுதிகளைக் கடந்து கேரளா வழியாக அரபிக்கடலை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தென் தமிழகப் பகுதிகளில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அடுத்த பாஜக மாநிலத் தலைவர் பதவி.. சரத்குமார் சொன்ன நச் பதில்..

சென்னையில் எப்போது மழை பெய்யும்?


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று பகல் நேரத்தில் திடீரென, குறுகிய நேரத்தில் தீவிரமான மழை பெய்யக்கூடும். இடையிடையே வெயிலும் தென்படலாம். மாலை முதல் மழையின் தீவிரம் அதிகரித்து, இரவு முழுவதும் அவ்வப்போது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை நாளை அதிகாலை வரையிலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா, புதுச்சேரி, கடலோர மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு

கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை நல்ல மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தை உலுக்கும் மெத்தபெட்டமைன் விவகாரம்.. சென்னையில் சிக்கிய 3 பேர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

மேலும், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கடலூரின் உள்பகுதிகள், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Follow Us