Viral Video : தலைக்கவசம் அணியாமல் பைக்கில் ஸ்டைலாக சாகசம் செய்த பெண்.. ரூ.16,000 அபராதம்!
Young Woman Fined 16000 Rupees After Viral Video | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதன் காரணமாக அவருக்கு ரூ.16,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். மேலும் சில குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி இனி யாரும் அத்தகைய செயல்களை செய்யக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கும். அந்த வகையில், தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டிச் சாகசம் செய்த இளம் பெண்ணுக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தலைக்கவசம் அணியாமல் ஸ்டைலாக பைக் ஓட்டிய இளம் பெண்
இந்திய சாலைகளில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. அதில் மிக முக்கியமாக உள்ளதுதான் சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது. ஒருவேளை வாகன் ஓட்டிகள் தலைக்கவசம் அணியவில்லை என்றால் அவர்களுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதிப்பதும் உண்டு. இந்த நிலையில் தான், தலைக்கவசம் அணியாமல் ஸ்டண்ட் செய்த பெண்ணின் வீடியோம் ஒன்று வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவன்: பாய்ந்து சென்று காப்பாற்றிய இளைஞர்
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
इन्फ्लुएंसर शिवन्या पांडे को अपनी स्पोर्ट्स बाइक पर बिना हेलमेट के, दोनों हाथ छोड़कर स्टंट करना बेहद भारी पड़ गया।
वह सीतापुर की एक बेहद व्यस्त सड़क (VIP रोड) पर स्पोर्ट्स बाइक को बेहद लापरवाही से दौड़ा रही थीं,
वीडियो में साफ़ देखा जा सकता था कि उन्होंने हेलमेट नहीं पहना था,
इसके साथ ही, वह चलती बाइक पर दोनों हाथ छोड़कर हैंडल से नियंत्रण हटाकर स्टंट कर रही थीं,
जैसे ही यह वीडियो सोशल मीडिया पर आया, तेजी से वायरल हो गया,
यातायात पुलिस सीतापुर ने वीडियो का स्वतः संज्ञान लेते हुए वाहन के नंबर के आधार पर ₹16,000 का मोटर व्हीकल एक्ट के तहत चालान जारी किया,
दिलचस्प बात यह है कि जैसे ही पुलिस का डंडा चला, मैडम ने तुरंत इंस्टाग्राम पोस्ट एडिट की और हाथ जोड़कर जनता से अपील करने लगीं,
“सड़कों पर ऐसा न करें, यह खतरनाक है”
सीतापुर की इस इन्फ्लुएंसर से सीखिए, रील के चक्कर में व्हील से हाथ छोड़ना कितना भारी पड़ सकता है l
— Vishal M. Yadav (@VishalMYadav_) October 12, 2026
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அந்த பெண்ணுக்கு போக்குவரத்து காவல்துறை ரூ.16,000 அபராதம் விதித்துள்ளது.