AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

WTC 2025-27: ஆஸ்திரேலியாவிடம் அபார தோல்வி.. தரவரிசையில் சரிந்த தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு சாதகமா?

World Test Championship Ranking: தென்னாப்பிரிக்காவின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி அட்டவணையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா, தற்போது மூன்றாம் இடத்திற்குச் சரிந்துள்ளது. இதனால் நியூசிலாந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேற, ஆஸ்திரேலியா முதலிடத்தில் தொடர்கிறது.

WTC 2025-27: ஆஸ்திரேலியாவிடம் அபார தோல்வி.. தரவரிசையில் சரிந்த தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு சாதகமா?
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்காImage Source: ICC
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Oct 2026 23:15 PM IST

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளி அட்டவணையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 214 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா புள்ளிகள் அட்டவணையில் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தத் தோல்விக்கு முன்பு 75 சதவீதப் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி, தற்போது 3ம் இடத்திற்குச் சரிந்துள்ளது. இது பின்னாளில் இந்திய அணிக்கு (Indian Cricket Team) சாதகமாக அமையலாம் என்று தெரிகிறது. இந்தநிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: காத்திருக்கும் சச்சினின் உலக சாதனை.. முறியடிக்க ஜோ ரூட்-க்கு மேப் போட்டு கொடுத்த இங்கிலாந்து வாரியம்!

சரிவை சந்தித்த தென்னாப்பிரிக்கா:

கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலிய அணி ஆட்டம் முழுவதும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 390 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை பதிவு செய்த நிலையில், பதிலுக்கு தென்னாப்பிரிக்கா 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 106 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி, தங்களது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட்டுக்கு 314 ரன்கள் என்ற நிலையில் டிக்ளேர் செய்து, போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி பெற 421 ரன்கள் இலக்கை நிர்ணயித்தனர். இருப்பினும், மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வெறும் 206 ரன்களுக்குள் சுருண்டதால், ஆஸ்திரேலியா 214 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் எளிதான வெற்றியைப் பெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்:

இந்தப் போட்டியின் முடிவு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. 5 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளுடன், தென்னாப்பிரிக்காவின் புள்ளி சதவீதம் 60.00-ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில், தென்னாப்பிரிக்காவின் மொத்தப் புள்ளிகள் இப்போது 36 ஆக உள்ளன. இதற்கிடையில், 6 போட்டிகளில் 4 வெற்றிகள், ஒரு தோல்வி மற்றும் ஒரு சமநிலையுடன், நியூசிலாந்து 72.22 புள்ளி சதவீதத்துடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில், 11 போட்டிகளில் 9 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளுடன், ஆஸ்திரேலியா 81.8 புள்ளி சதவீதத்துடன் உறுதியாக முதலிடத்தில் உள்ளது.

ALSO READ: திரும்பிய ஃபின் ஆலன், லாக்கி ஃபெர்குசன்.. இந்தியாவிற்கு எதிரான NZ ஒருநாள் அணி அறிவிப்பு!

மற்ற அணிகளின் நிலவரம் என்ன..?

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 தரவரிசையில் வங்கதேசம் 55.56 சதவீதப் புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இந்தியா 51.52 சதவீதப் புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 6வது இடத்திலும், இலங்கை 7வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 8வது இடத்திலும், பாகிஸ்தான் 9வது இடத்தில் கடைசி இடத்திலும் உள்ளன.

Follow Us