AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மரணம் குறித்து பிரசங்கித்த சில நிமிடங்களில் உயிரிழந்த பாதிரியார்! தலையில் விழுந்த பிரம்மாண்ட சிலுவை

தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதிரியார் பலிபீடத்தின் பின்னால் நின்று பக்தர்களை நோக்கிப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய சிலுவை திடீரென கழன்று முன்னோக்கி விழுந்து அவரது தலையின் பின்புறத்தில் தாக்கியது. பின்னால் என்ன நடக்கிறது என்பதை அறியாத நிலையில் இருந்த பாதிரியார், சிலுவை தாக்கியதும் கீழே விழுந்தார்.

மரணம் குறித்து பிரசங்கித்த சில நிமிடங்களில் உயிரிழந்த பாதிரியார்! தலையில் விழுந்த பிரம்மாண்ட சிலுவை
திருப்பலியின் போது தலையில் சிலுவை விழுந்து உயிரிழந்த பாதிரியார்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Oct 2026 19:51 PM IST

அக்டோபர் 19, 2026: ஈக்வடார் நாட்டில் தேவாலயத்தில் நேரலையாக நடைபெற்ற திருப்பலியின்போது, பாதிரியாரின் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட சிலுவை அவர் தலையின் பின்புறத்தில் விழுந்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கை நிலையற்றது என்றும், ஒருநாள் அனைவரும் உயிரிழக்க நேரிடும் என்றும் பிரசங்கித்த சில நிமிடங்களிலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேரலையில் பதிவான விபத்து


ஈக்வடாரின் குவாயாகில் நகரில் உள்ள அவரர் லேடி ஆஃப் பெர்பெச்சுவல் ஹெல்ப் தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்த பாதிரியார் பேட்ரிசியோ ஆல்ஃபிரடோ சான்செஸ் மோலினாரி, கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக குவாயாகில் பேராயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதிரியார் பலிபீடத்தின் பின்னால் நின்று பக்தர்களை நோக்கிப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய சிலுவை திடீரென கழன்று முன்னோக்கி விழுந்து அவரது தலையின் பின்புறத்தில் தாக்கியது. பின்னால் என்ன நடக்கிறது என்பதை அறியாத நிலையில் இருந்த பாதிரியார், சிலுவை தாக்கியதும் கீழே விழுந்தார்.

மேலும் படிக்க: பழுதான துப்பாக்கியால் தப்பிய உயிர்கள்.. அமெரிக்காவில் இந்து கோவில் மீது தாக்குதல் சதித்திட்டம்.. 19 வயது இளைஞர் கைது!

அதன்பிறகு அவர் எழுந்திருக்கவில்லை. இதைக் கண்ட பக்தர்கள் அலறி அழுததுடன், அவருக்கு உதவுவதற்காக விரைந்து சென்று ஆம்புலன்ஸையும் அழைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் பணியாளர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றபோதிலும், அன்றைய தினமே அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தேவாலயத்தின் நேரலை ஒளிபரப்பில் பதிவாகியுள்ளது. பின்னர் அந்த நேரலை காணொளி நீக்கப்பட்டது.

மரணம் குறித்து பேசிய சில நிமிடங்களில் விபத்து

இந்தச் சம்பவத்தில் துயரமான தற்செயல் நிகழ்வாக, விபத்து ஏற்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் பாதிரியார் மரணம் மற்றும் வாழ்க்கையின் நிலையற்ற தன்மை குறித்து பிரசங்கம் செய்திருந்தார். இயேசுவின் போதனைகளை எடுத்துரைத்த அவர், கைப்பேசியில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்த்து, கடவுளுடனும் தங்களது அன்புக்குரியவர்களுடனும் நேரத்தைச் செலவிட வேண்டும் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க: பிரான்ஸில் வெடித்த மிகப்பெரிய வன்முறை.. “Calm and Order” உத்தரவிட்ட அதிபர் மேக்ரோன்!

“ஒருநாள் இங்கு இருக்கும் நாம் அனைவரும் இறக்கப் போகிறோம். சில நேரங்களில், நாம் சில விஷயங்களுக்காகச் செலவிடும் நேரத்தைவிட, கடவுளுடன் செலவிடும் நேரமே அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும்” என்று அவர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்திருந்தவர்களுக்குக் கடவுள் ஆசி வழங்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யத் தொடங்கியபோது, அவருக்குப் பின்னால் இருந்த சிலுவை திடீரென சுவரிலிருந்து கழன்று அவர் மீது விழுந்தது.

Follow Us