Om Movie: வீழா வீரா வா வீரா… தனுஷின் ஓம் படத்தின் ‘வீழா வீரா’ பாடல் வெளியீடு!
Veezha Veera Song: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் 55வது திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் ஓம். இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், இப்படத்திலிருந்து வீழா வீரா என்ற செகண்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆனதில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் படங்கள் வெளியாகியிருந்தது. அந்த விதத்தில் இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் கர. இந்த படத்தில் தனுஷ் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்திருந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பின் டி 55 என்று அறிவிக்கப்பட்ட படம்தான் ஓம் (Om Movie). அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Pariasamy) இயக்கிய இப்படத்தை, தனுஷ் தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கியிருந்தார். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துவருகிறார்.
இவரின் இசையில் அல்லக லோவா என்ற பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது “வீழா வீரா” (Veezha Veera) என்ற ஓம் படத்தின் தீம் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இன்று (19/10/2026) ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படத்தின் பாடலை படக்குழு பகிர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: அவன் தூக்குனா நானும் தூக்குவேன்.. சாப்பாட்டுக்காக டிடிஃஎப் வாசனுடன் மோத நினைக்கும் லக்ஷ்மி பிரியா!
ஓம் திரைப்படத்தின் வீழா வீரா என்ற பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Ottu mothama adangi nikkanume 💥
Veezha Veera, second single from #OM out now.
Tamil ▶️ https://t.co/VzzYV5H6Ov
Telugu ▶️ https://t.co/e6a8EFDiNW
Hindi ▶️ https://t.co/6LKSraqTDfA @Rajkumar_KP Film.
A @SaiAbhyankkar Sensation 🔥Sung by: @Tipusinger #SaiAbhyankkar #RiteshGRao 🎙️
Penned by: @arunn_srini @LyricsShyam @kumaarofficial ✍️Worldwide in cinemas from November 2️⃣0️⃣
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @WarnerMusicIN @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) October 19, 2026
இந்த ஓம் திரைப்படமானது செம்மர கடத்தல் மற்றும் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது நிஜ கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவரின் தந்தை வேடத்தில் நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது 2026ம் அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டின் காரணமாக நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேக்கிங் வீடியோவை வெளியிட்டது பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு – வைரலாகும் வீடியோ
இப்படம் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அதை முன்னிட்டு, இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு “ஏ” தர சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.