டிடிஃஎப் வாசன்-ஐ உசுப்பேத்திய முகேஷ்.. மோதலில் பிக் பாஸ் வீடு – வைரலாகும் ப்ரோமோ!
TTF Vasan And Mukesh Clash: தமிழில் மக்கள் மத்தியில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் 7வது வாரமான் இந்த வாரத்தின் தொடக்கத்திலே சர்வைவல் டாஸ்க்குடன் ஆரம்பமான நிலையில், விறுவிறுப்பாக இருந்துவருகிறது. அந்த விதத்தில் டாஸ்க் ஒன்றில் டிடிஃஎப் வாசன்-ஐ உசுப்பேத்தி முகேஷ் மோதலில் ஈடுபட்டது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சியானது 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.நேற்று (18/10/2026) இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியிலிருந்து ராகவ் ரங்கநாதன் மற்றும் சாந்தினி தமிழரசன் என இரு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். அந்த விதத்தில் 16 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 7வது வாரம் சிறப்பாக தொடங்கியுள்ளது. அந்த விதத்தில் இந்த வாரத்தின் முதல் நாளையே சர்வைவல் என்ற டாஸ்க்குடன் (Survival Task) ஆரம்பமான நிலையில், மக்கள் மத்தியில் விறுவிறுப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சர்வைவல் டாஸ்கில் ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அந்த விதத்தில் டாஸ்க் ஒன்றின்போது முகேஷ் டிடிஃஎப் வாசனிடம் தகாத வார்த்தைகளால் பேசி மோதலில் ஈடுபட செய்யும் விதமாக செய்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அவன் தூக்குனா நானும் தூக்குவேன்.. சாப்பாட்டுக்காக டிடிஃஎப் வாசனுடன் மோத நினைக்கும் லக்ஷ்மி பிரியா!
டிடிஃஎப் வாசனிடம் மோதலில் ஈடுபட்ட முகேஷ்:
ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் இடையே தங்களின் கல் அடுக்குகளை பாதுகாக்கும் வகையில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அந்த டாஸ்கின்போது டிடிஃஎப் ரெட் அணிக்காக தனது விளையாட்டை விளையாண்ட நிலையில், அவரால் எந்த கல்லையும் குறிபார்த்து அடக்கமுடியவில்லை. அந்த விதத்தில் ப்ளூ அணியில் இருந்த முகேஷ் டிடிஃஎப் வாசன்-ஐ உசுப்பேத்தும் விதத்தில் வார்த்தைகளை விடுகிறார்.
இதையும் படிங்க: அடி எரோபிளேன போல… சூர்யா – நஸ்ரியாவின் சீன் படத்தின் 2வது பாடல் வெளியீடு!
இந்நிலையில் அமைதியாக டிடிஃஎப் வாசன் வீட்டிற்குள் செல்லும்போதும், தேவையற்ற வார்த்தையை முகேஷ் பயன்படுத்தியிருந்த நிலையில், அது மோதலில் முடிந்துள்ளது. பின் டிடிஃஎப் வாசனை ஜேசன் மற்றும் மற்ற போட்டியாளர்கள் கூட்டி செல்வதுபோல் இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. தற்போது இது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 43வது நாளின் 4வது ப்ரோமோ குறித்தும் வெளியான எக்ஸ் பதிவு:
#Day43 #Promo4 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/AX3u83HU7I
— Vijay Television (@vijaytelevision) October 19, 2026
டிடிஃஎப் வாசன் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ப்ரீ பாஸை வாங்கியுள்ள நிலையில், அவரை எந்த போட்டியாளர்களும் இந்த வாரத்தில் நாமினேஷன் செய்யமுடியாது அந்த விதத்தில் வைரம் டாஸ்கில் டிடிஃஎப் வாசனுக்கு சிறப்பான பாராட்டு இருந்த நிலையில், அவர் தற்போது மற்ற டாஸ்குகளிலும் தனது கவனத்தை சிறப்பாக செலுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு மேலும் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.