Viral Video : இந்திய ரயில் சேவை தான் சிறந்தது.. வெளிநாட்டு பெண்ணின் வீடியோ வைரல்!
Foreign Tourist Praises Train Food Delivery | இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்திய ரயில் சேவை குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி இந்தியாவில் உணவு ஆர்டர் செய்து வாங்கியது குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்திய ரயில் சேவை (Indian Train Service) மிகவும் பிடித்தமானதாகவும், ஆச்சர்யமூட்டும் அம்சமாகவும் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்திய ரயில் சேவை குறித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த பெண் ஒருவர் இந்திய ரயில் சேவை குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த விஷயத்தில் இந்தியா சிறப்பாக உள்ளது – வெளிநாட்டு பெண்
இந்திய ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு விதமான சேவைகளை வழங்கி வருகிறது. இது இந்தியர்களால் பெரிதாக பாராட்டப்படாமல் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த அம்சமாக உள்ளது. காரணம் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத வகையில், இந்தியாவில் ரயில் சேவை மிகவும் சிறப்பாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், வெளிநாட்டு பெண் ஒருவர் இந்திய ரயில் சேவை குறித்து பதிவிடும் வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : இவ்வளவு மோசமா?.. அலற வைக்கும் டெல்லி காற்று மாசு வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் வெளிநாட்டு பெண் ஒருவர் இந்திய ரயில் சேவை குறித்து பேசுகிறார். அதில், இந்தியா மிகவும் கூலான நாடாக உள்ளது. நான் ரயிலில் பயணம் செய்துக்கொண்டு இருக்கிறேன். அப்போது பீட்சா மற்றும் பிரெஞ்ச் ஃபிரைஸ் ஆகியவற்றை ஆர்டர் செய்தேன். டெலிவரி ஊழியர் ரயிலிலே வந்து எனக்கு உணவு டெலிவரி செய்தார் என்று அந்த பெண் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : பீகாரில் எருமை மாடு மீது வந்து வாக்கு செலுத்திய நபர்.. வைரல் வீடியோ!
இந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.