Viral Video : ஆபத்தான முறையில் இருசக்கர் வாகனம் ஓட்டிய நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Youth Involved Dangerous Stunt | சாலைகளில் ஆபத்தான முறையின் வாகனம் ஓட்டுவது, ஸ்டண்ட் செய்வது, வீலிங் செய்வது ஆகியவற்றை சில இளைஞர்கள் பழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், ஆபத்தான முறையின் ஸ்டண்ட் செய்த இளைஞர்கள் போலீசார் உடனடி தண்டனை கொடுத்துள்ளனர்.
பெரும்பாலான இளைஞர்கள் தாங்கள் செய்யும் அட்டகாசங்களை வீர செயலாக கருதுகின்றனர். மேலும் அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிடுவதன் மூலம் தங்களுக்கு அதிக லைக்குகள் கிடைக்கும் எனவும் அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், அவ்வாறு அவர்கள் ஆபத்தான மற்றும் அட்டகாசமான செயல்களை செய்து அதனை வீடியோ எடுத்து பதிவிடுவது அவர்களுக்கே ஆபத்தாக முடிந்துவிடுகிறது. அந்த வகையில், இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அதனை வீடியோ பதிவு செய்து வைத்திருந்த நிலையில், தற்போது அவர்கள் காவல்துறையின் கைப்பிடியில் உள்ளனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
இருசக்கார வாகனம் ஓட்டியபடி அட்டகாசம் செய்த இளைஞர்கள்
பல இளைஞர்கள் சாலைகளில் வாகனம் ஓட்டும்போது சாகசம் செய்து அவற்றை வீடியோவாக பதிவுடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சாலையில் வாகனம் ஓட்டும்போது விதிகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஆனால், பெரும்பாலான இளைஞர்கள் அவற்றையெல்லாம் கண்டுக்கொள்வதே கிடையாது. அவர்கள் தங்களது சுய விருப்பத்திற்கு ஏற்ப பிறரின் பாதுகாப்பில் அக்கறை கொள்ளாதவர்களை போல நடந்துக்கொள்வர். அந்த வகையில், ஆபத்தான முறையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞரின் வீடியோ வைரலான நிலையில், அது குறித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த சிறுவன்.. கட்டிலுடன் தூக்கிச் சென்ற உறவினர்கள்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
🚨 बेदरकार स्टंटबाजीला आळा!
मोटार स्कुटीवर स्टंट करताना नियम मोडणाऱ्या युवकावर मुंब्रा पोलिसांकडून तात्काळ कारवाई.#ThanePolice #MumbraPolice #RoadSafety #NoStuntRiding pic.twitter.com/qZbL3zNfXS— ठाणे पोलीस.. Thane Police (@ThaneCityPolice) November 3, 2025
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளைஞர்கள் சிலர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றனர். அதில் ஒரு இளைஞர் மட்டும் தனது இருசக்கர வாகனத்தை மிகவும் ஆபத்தான முறையில் ஓட்டுகிறார். வாகனத்தை வளைத்து வளைத்து ஓட்டுவது, எழுந்து நின்று ஓட்டுவது, நண்பர்களை எட்டி உதைக்க செல்வது போன்ற ஆபத்தான செயல்களை செய்கிறார். இவை அனைத்தையும் அவரது நண்பர்கள் வீடியோ பதிவு செய்த நிலையில், அது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. தற்போது இந்த வீடியோ குறித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், அட்டகாசத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.