Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : பீகாரில் எருமை மாடு மீது வந்து வாக்கு செலுத்திய நபர்.. வைரல் வீடியோ!

Man Rides Buffalo to Vote in Bihar Election | பீகாரில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஒருவர் எருமை மாட்டின் மீது ஊர்வலமாக வந்து வாக்கு செலுத்தியுள்ளார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

Viral Video : பீகாரில் எருமை மாடு மீது வந்து வாக்கு செலுத்திய நபர்.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Nov 2025 22:07 PM IST

மனிதர்கள் எப்போதுமே வித்தியாசமான செயல்களை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடக செயலிகளின் உதவியால் அவ்வாறு உலகம் முழுவதும் மனிதர்கள் வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில்,  பீகாரில் ஒருவர் எருமை மாட்டின் மீது அமர்ந்து வந்து வாக்களித்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

பீகார் தேர்தலில் வாக்களிக்க எறுமை மீது வந்த நபர்

பீகாரில் சட்டமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது. அங்கு மொத்தம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளில் இன்று (நவம்பர் 06, 2025) தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏராளமான பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்த நிலையில், ஒருவர் எருமை மாட்டின் மீது வந்து வாக்களித்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : Viral Video : குதிரையில் Patrol சென்ற துபாய் போலீஸ்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு நபர் எருமை மாட்டின் மீது வருகிறார். அவருக்கு பின்னால் சில உள்ளூர் பெண்கள் பாரம்பரிய பாடல்களை பாடிக்கொண்டு அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பள்ளிக்கு செல்ல அடம் பிடித்த சிறுவன்.. கட்டிலுடன் தூக்கிச் சென்ற உறவினர்கள்!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

தேர்தல்களில் போது கவனத்தை ஈர்க்கும் வகையில் பலரும் இத்தகைய செயல்களை செய்யும் நிலையில், இந்த நபர் எருமை மாட்டின் மீது வந்து வாக்கு செலுத்திய வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.