Viral Video : குழந்தை ஸ்மார்ட்போன் பார்க்காமல் இருக்க தாய் போட்ட மாஸ்டர் பிளான்.. வைரல் வீடியோ!
Mother's Viral Trick To Stop Child Watching Mobile Phone | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தனது குழந்தை ஸ்மார்ட்போன் பார்க்காமல் இருக்க தாய் செய்த செயலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில சிந்திக்க வைக்கும் விதமாகவும், சில சிரிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், செல்போன் பார்க்கும் பெண் குழந்தையை அவரது தாய் அவர் இனி செல்போன் பாக்காமல் இருக்க செய்த செயல் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பர்க்கலாம்.
சிறுமியை செல்போன் பாக்காமல் இருக்க செய்ய தாய் போட்ட மாஸ்டர் பிளான்
முன்பெல்லாம் குழந்தைகள் கதை கேட்டு வளர்ந்த நிலையில், தற்போது குழந்தைகள் மொபைல் போனில் வீடியோ பார்த்து தான் வளர்கின்றனர். சாப்பிடும்போது, விளையாடும்போது என எப்போதுமே அவர்கள் ஸ்மார்ட்போன்களில் மூழ்கி கிடக்கின்றனர். இவ்வாறு குழந்தைகள் ஸ்மார்ட்போன் பார்ப்பது அவர்களது மன நிலையை மிக கடுமையாக பாதிக்கும் என்று, மூளை வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்காக பெற்றோர்கள் என்னதான் செய்தாலும், குழந்தைகள் அடம் பிடித்து ஸ்மார்ட்போன் பார்க்கின்றனர். இந்த நிலையில், தாய் ஒருவர் தனது குழந்தை ஸ்மார்ட்போன் பார்க்காமல் இருக்க செய்த செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : ரஷ்யாவில் Celebrity ஆன தாய்.. மகன் வெளியிட்ட மகிழ்ச்சி வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் இருக்கிறார். அவரது கண்ணை சுற்றி அவரது தாய் கருப்பு மையை தடவி விட்டுள்ளார். ஸ்மார்ட்போன் பார்ப்பதால் தான் அவரது கண்ணை சுற்றி அவ்வாறு கருப்பாக இருப்பதாக அந்த பெண் கூறுகிறார். உடனடியாக அந்த குழந்தை கண்ணாடியை பார்த்து அழ தொடங்குகிறது. இனி ஸ்மார்ட்போன் பார்க்க மாட்டேன் என்றும் அந்த குழந்தை கூறுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.