Viral Video : ரஷ்யாவில் Celebrity ஆன தாய்.. மகன் வெளியிட்ட மகிழ்ச்சி வீடியோ!
Indian Mom Got Attention In Russia | இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாய், தந்தையை ரஷ்யாவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருப்பவர்கள் அவரிடம் வந்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளை இந்தியர்கள் எப்படி வியப்பாக பார்ப்பார்களோ அதேபோல தான் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அவர்கள் இந்தியர்களையும் பார்ப்பார்கள். குறிப்பாக இந்திய பாரம்பரிய உடை ஆகியவை அவர்களுக்கு மிகவும் வித்தியாசமானதாகவும், வியப்பூட்டும் விதமாகவும் இருக்கும். இதன் காரணமாக அவர்களுக்கு இந்தியர்கள் மீதான ஈர்ப்பு ஏற்படும். அந்த வகையில் ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்திய பெண் ஒருவரிடம் அங்கிருக்கும் மக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவில் Celebrity ஆன தாய் – மகன் வெளியிட்ட மகிழ்ச்சி வீடியோ
இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயை ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் இந்திய பாரம்பரிய உடை அணிந்திருந்த நிலையில், அதனை கவனித்த அந்த ஊர் மக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துச் சென்றுள்ளனர். இந்த வீடியோவை பதிவிட்டுள்ள அவரது மகன் எனது தாய் ரஷ்யாவில் செலபிரிட்டியாகிவிட்டார் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : ஆபத்தான முறையில் இருசக்கர் வாகனம் ஓட்டிய நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் தாய் மற்றும் மகன் ரஷ்யாவின் சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அந்த தாய் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்துள்ளார். அது அங்கிருந்த மக்களுக்கு வியப்பாக தோன்றிய நிலையில் அவர்கள் வந்து அந்த தாயுடன் புகைப்படம் எடுத்துக்கொள்னின்றனர். அதனை அவரது மகன் தூரத்தில் இருந்து வீடியோ எடுக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : இந்தியர்களை போல யாராலும் உபசரிக்க முடியாது.. வெளிநாட்டு சுற்றுலா பயணியின் வீடியோ வைரல்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தனது தாய் குறித்து அவரது மகன் மிகவும் மகிழ்ச்சியுடன் வீடியோ பதிவிட்டுள்ளது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.