Viral Video : ரயிலில் குளித்த இளைஞர்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!
Young Man Bathed in Moving Train | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் குளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிம் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதன் காரணமாக ஏராளமான இளைஞர்கள் தங்களது வீடியோக்களும் வைரலாக வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான மற்றும் ஆபத்தான வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், இளைஞர் ஒருவர் ஓடும் ரயில் குளிக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் பலரும் பல விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஓடும் ரயிலில் குளித்த இளைஞர்
உலக அளவில் மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சில வீடியோக்கள் இயல்பாகவே வைரலாகும் நிலையில், சிலர் தங்களது வீடியோ வைரலாக வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு வீடியோக்களை பதிவு செய்து அவற்றை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் குளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : பீகாரில் எருமை மாடு மீது வந்து வாக்கு செலுத்திய நபர்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Gems Of Railways
Man taking bath in a train pic.twitter.com/9h0iLlVwsz
— Woke Eminent (@WokePandemic) November 8, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ரயிலுக்குள் நின்றுக்கொண்டு ஒரு இளைஞர் குளித்துக்கொண்டு இருக்கிறார். அவர் கழிவறையில் நின்று குளிக்கவில்லை. மாறாக இருக்கைகளுக்கு நடுவே இருக்கும் நடைபாதையில் நின்றுக்கொண்டு குளிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : ஆபத்தான முறையில் இருசக்கர் வாகனம் ஓட்டிய நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.